ரஜினியின் ''காலா'' ரீலீஸ் ஜூன் 7-ம் தேதி: தனுஷ் திட்டவட்டம்!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வரும் ஜுன் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 21, 2018, 07:46 AM IST
ரஜினியின் ''காலா'' ரீலீஸ் ஜூன் 7-ம் தேதி: தனுஷ் திட்டவட்டம்!! title=

இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரஜினியுடன், ஹுமா குரேசி, நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

அதன்படி 'காலா' படத்தின் டீசர் காட்சிகள் கடந்த மார்ச் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் தடை ஏற்பட்டது. 

இதனால், கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து நேற்று முன்தினம் திரைப்படத் தயாரிப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று முதல் மீண்டும் படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், காலா படம் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகும் என தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

Trending News