#Karnataka: கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல்!

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறயுள்ளது. இதற்காக நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

Last Updated : May 9, 2018, 08:21 AM IST
#Karnataka: கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல்! title=

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறயுள்ளது. இதற்காக நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் ஒரு வீட்டிலிருந்து சுமார் 20 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த போலி வாக்காளர் அடையாள அட்டை பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகர் தங்கியுள்ள பிளாட்டில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் ரெய்டு நடத்தியதில் 9746 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், பிரிண்டர்கள் , லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். 

இதுகுறித்து கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் போலி அல்ல, உண்மையானது தான். இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் காங்கிரஸ் கூறிய புகாரில் உண்மையில்லை என பாஜக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முனி ரத்னாநாயுடு தோல்வி பயத்தில் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். 

Trending News