மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 4 பேர் பலி!

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து மற்றும் இரு சக்கரவாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்!

Last Updated : Mar 25, 2018, 08:51 PM IST
மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 4 பேர் பலி! title=

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து மற்றும் இரு சக்கரவாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்!

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தின் குஷி என்ற இடத்திலிருந்து இந்தூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் எதிர்பாரா விதமாக பேருந்து தீபிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 4 பேர் சிக்கி பலியாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும், பேருந்தில் பயணித்த பயணிகள் மூவரும் உடல் கருகி பலியாகினர். 

காயங்களுடன் மீட்கப்பட்ட இதர பயணிகள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News