18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

Last Updated : Apr 28, 2018, 01:32 PM IST
18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!  title=

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். 

இது குறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்கு நேற்று ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வாங்கப்பட்டதாக தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் விமர்சித்தார். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர வேண்டும் என சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீட்டார். 

இது தொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியதாவது...!

தீர்ப்பு பற்றி கருத்து கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. நாங்கள் மனசாட்சியுடனும் கடமையை உணர்ந்து செயல்படுவதால் விமர்சனங்கள் குறித்து கவலையில்லை. நீதிபதிகளாகிய நாங்கள் பயப்பட வேண்டியதும், பதில் சொல்ல வேண்டியதும் ஆண்டவனுக்கு மட்டும் தான். நீதிபதிகள் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். 

வழக்கின் தன்மையை பொறுத்துதான் மனசாட்சியுடனும் முழு மனதுடன் விசாரித்து தீர்ப்பு வழங்குகிறோம். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு எனவும் தகுதிநீக்கத்தை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக-கள் தொடர்ந்த வழக்கிலும் விரைவில் தீர்ப்பு எனவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்! 

Trending News