இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்தது சரியே: Zakir Naik

சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில், அடிப்படைவாத கும்பல் ஒரு இந்து கோவிலை உடைத்து தீ வைத்தது. உலகின் பல மூலைகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. ஆனால் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் இந்த சம்பவத்தை ஆதரித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 3, 2021, 12:52 PM IST
  • பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவில் சமீபத்தில் இந்து கோயில் உடைக்கப்பட்டது
  • இந்த சம்பவத்தின் போது போலீசார் அங்கிருந்தும் எதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை
  • பாகிஸ்தானில் இதுவரை நூற்றுக்கணக்கான சிற்பங்களும் கோயில்களும் உடைக்கப்பட்டுள்ளன
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்தது சரியே: Zakir Naik title=

புதுடெல்லி: பாகிஸ்தானில் கோயில் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு, இந்தியாவிலிருந்து தப்பியோடிய மதபோதகர் ஜாகிர் நாயக் ஆதரவு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாட்டில் கோயில்கள் இருக்கக்கூடாது. இஸ்லாமிய நாட்டில் சிலை வழிபாட்டை அனுமதிக்க கூடாது என்றும் இஸ்லாமிய தொலைக்காட்சி ஒன்றில் ஜாகிர் நாயக் மீண்டும் சர்ச்சைகுரிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். சிலைகளை இடிக்கப்படுவதை ஆதரித்த ஜாகிர் நாயக், இஸ்லாமிய நாட்டில் சிலைகளுக்கு என்ன வேலை என்று கூறினார்.

குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை விவரித்த அவர், சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்றும், இது போன்ற ஏதாவது இருந்தால் அதை அழிக்க வேண்டும் என்றும் கூறினார். எனவே ஒரு இஸ்லாமிய நாட்டான பாகிஸ்தானில் (Pakistan) சிலை இருக்கக்கூடாது என்றார்.

சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில், அடிப்படைவாத கும்பல் ஒரு இந்து கோவிலை உடைத்து தீ வைத்தது. உலகின் பல மூலைகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. ஆனால் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் இந்த சம்பவத்தை ஆதரித்துள்ளார்.

பாகிஸ்தானின் உள்ளூர் மதகுருமார்கள் மற்றும் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் ஆதரவாளர்கள் தலைமையிலான கும்பல், பழைய கோயிலுடன் ஒரு புதிய கோயிலின் கட்டுமானப் பணிகளையும் இடித்தது. இருப்பினும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, மாநில அமைச்சர் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டித்தார், மேலும் இந்த வழக்கில் சுமார் 45 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் (India) ஜாகீரின் பிரிவினைவாத செயல்கள் அம்பலமாகியதிலிருந்து அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இந்தியாவிலிருந்து தப்பியோடி, வேறு நாட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். 

ALSO READ | Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News