மூன்றாவது மார்பகம் இருப்பது அழகா அசிங்கமா? இதற்காக அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்

Weird Beauty: தன்னை அழகற்றவராக காட்டிக் கொள்வதற்காக மூன்றாவது மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து வைத்துக் கொண்ட பெண்ணைப் பற்றித் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 28, 2022, 03:29 PM IST
  • அசிங்கமாக காட்சியளிக்க விரும்பும் பெண்ணை பார்த்ததுண்டா?
  • ஆண்களிடம் இருந்து விலக மூன்றாவது மார்பகத்தை பொருத்திக் கொண்ட பெண்
  • மூன்றாவது மார்பகம் போலியானது அல்ல
மூன்றாவது மார்பகம் இருப்பது அழகா அசிங்கமா? இதற்காக அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண் title=

லண்டன்: அழகுக்காக அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அழகாக தோற்றமளிக்கக்கூடாது என்பதற்காக அறுவைசிகிச்சை செய்து மூன்றாவது மார்பகத்தை பொருத்திக் கொண்ட பெண்ணைப் பற்றிக் கேட்டதுண்டா? அசிங்கமாக தோற்றமளிக்க அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறும் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தால் அவர் அழகாகவே இருக்கிறார். இது அமெரிக்க பெண்மணியின் விபரீதமான ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றி வித்தியாசமானவராக மாறியிருக்கிறார் 21 வயது இளம்பெண்.

21 வயதான Jasmine Treadville, தனது மூன்றாவது மார்பகத்தை பொருத்துவதற்கு வினோதமான அறுவை சிகிச்சை செய்ததாகவும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறுகிறார். ஹாலிவுட் நட்சத்திரமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் 1990 ஆம் ஆண்டு வெளியான டோட்டல் ரீகால் திரைப்படத்தைப் பார்த்து, அவர் இந்த முடிவுக்கு வந்தாராம்.திலிருந்து அவர் தனது உத்வேகத்தைப் பெற்றார்.

மேலும் படிக்க | அழகுக்கு வரையறை செய்ய நீங்கள் யார்? போராடும் அழகுப் பிரபலங்கள்

இந்த விருப்பத்துக்காக சுமார் ரூ. 17 லட்சம் 918,000 பவுண்டுகள்) கொடுத்து, மூன்றாவது மார்பகத்தை பொருத்தியிள்ளார். ஆண்களிடம் இருந்து விலகிச் செல்ல விரும்பினதாலும், அழகு இல்லாததவளாகவும் காட்டிக் கொள்ளவே, தான் இந்த அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார். இது ஆண்களுக்கு அழகற்றதாக தன்னை மாற்றிவிட்டது என்று அவர் நம்புகிறார்.

ஆனால், தனது பெற்றோருக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், இது அவர்களின் வெறுப்பைப் பெற்றுத்தந்தது என்றும் ஜாஸ்மின் ட்ரைடெவில் தெரிவித்தார். 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஜாஸ்மின் ட்ரைடெவிலுக்கு இந்த வித்தியாசமான அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

முதலில் தனக்கு இந்த அறுவைசிகிச்சை செய்ய யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், இறுதியில் ஒத்துக் கொண்ட மருத்துவரும், தான் சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அது தொடர்பாக ஒரு ஒப்பந்ததை உருவாக்கி அதில் கையெழுத்திட்டப் பிறகே மார்பகத்தைப் பொருத்தியதாக சொல்கிறார் ஜாஸ்மின்.

மேலும் படிக்க | வயசானாலும் அழகு ஸ்டைலும் உன்ன விட்டு போகல’ ரம்யா கிருஷ்ணனின் கலக்கல் புகைப்படங்கள்

தனது மூன்று மார்பகங்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், சிக்கல்கள் வந்தாலும், தனது மார்பகம் போலியானது என்பதை ஜாஸ்மினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜெர்மன் பத்திரிகையாளர் தனது மூன்றாவது மார்பகம் உண்மையில் போலியானது என்று கூற வெப்ப கேமராவைப் பயன்படுத்தி, பிறகு உண்மையை புரிந்துக் கொண்டதாக தெரிவித்தார் ஜாஸ்மின்.  

அமெரிக்காவின் தம்பாவைச் சேர்ந்த ஜாஸ்மின், வினோதமான அறுவை சிகிச்சைக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தன்னைப் பற்றி அனைவரும் கேவலமாக நினைப்பதாகவும் தெரிவித்தார். குடும்பத்தில் யாரும் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அப்பா மட்டும், அதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பேசுகிறார் என்று சொன்னார்.

இப்படி ஒரு வித்தியாசமான பெண்ணையும், மூன்றாவது மார்பகம் கொண்ட அழகான பெண்ணையும் நீங்கள் பார்த்ததுண்டா? 

மேலும் படிக்க | அழகான சருமத்திற்கு அற்புத பலன் அளிக்கும் ஐந்து பொருட்கள்! தேங்காயின் அழகு வைத்தியம்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News