டைட்டானிக் போலவே டைட்டன் திரைப்படமாகுமா? கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேம்ஸ் கேமரூன்

Titan Submarine Accident: டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து ஜேம்ஸ் கேமரூன் படம் எடுப்பாரா? என்ற கேள்வியை பலரும் சில நாட்களாக வினவி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதிலை டைட்டானிக் படத்தின் இயக்குநர் அளித்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2023, 03:02 PM IST
  • ஒரு டைட்டானிக் பத்தாதா? இன்னொன்னு எதுக்கு?
  • கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேமரூன்
  • டைட்டானிக் படத்தின் இயக்குநரின் நச்சென்ற பதில்
டைட்டானிக் போலவே டைட்டன் திரைப்படமாகுமா? கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேம்ஸ் கேமரூன் title=

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் டைட்டானிக் கப்பல் தொடர்பான விபத்துகளில் உள்ள ஒற்றுமைகள் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் ஒரு அமெரிக்க நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் கூறினார். அதன்பிறகு, 
டைட்டான் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து ஜேம்ஸ் கேமரூன் படம் எடுப்பாரா? என்ற கேள்விகள் பரவலாகின.

ஜூன் 18ஆம் தேதி டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைப் பார்ப்பதற்காக டைட்டன் கப்பலில் ஆழ்கடலில் இறங்கிய 5 பேர் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தனர். ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன், நேற்று (ஜூலை 16, 2023 சனிக்கிழமை) ட்விட்டரில் இந்த சம்பவம் குறித்து திரைப்படம் எடுப்பது குறித்த ஊகங்களுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார்.

'ஊடகங்களில் பரப்பப்படும் புண்படுத்தும் வதந்திகளுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை, ஆனால், இந்த விவகாரத்தில் நான் பேசாமல் இருக்கமுடியாது.டைட்டன் சம்பவத்தை பற்றி நான் படம் எடுக்க நினைக்கவில்லை, அப்படி செய்ய மாட்டேன்' என்று டைட்டானிக் படம் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: வெயிட்டிங்கில் ஓவர் 'அவதார் 2' - பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை!
 
டைட்டானிக் கப்பல் மூழ்கியதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்
1997-ல் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கியதை அடிப்படையாகக் கொண்டு 'டைட்டானிக்' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் உலக அளவில் புகழ் பெற்றது. டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் டைட்டானிக் கப்பல் தொடர்பான விபத்துகளில் உள்ள ஒற்றுமைகள் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக கேமரூன் (68) சமீபத்தில் அமெரிக்க செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த உரையாடலில் கூறினார்.

கடந்த மாதம், டைட்டன் தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்ட குப்பைகள் "டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுடன் ஒத்துப்போகின்றன" என்று அமெரிக்க கடலோர காவல்படை கூறியது.

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில், ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன் மூலம் இயக்கப்படும் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன் மூலம் இயக்கப்படும் டைட்டன் நீர்மூழ்கி கப்பல், ஐந்து பயணிகளுடன் ஜூன் 18ஆம் தேதி காலை டைட்டானிக் கப்பல் இடிபாடுகளை பார்க்க புறப்பட்டது. 

டைட்டானிக் 1912ல் கடலில் மூழ்கியது

டைட்டானிக் உலகின் மிகப்பெரிய நீராவி இயந்திரத்தால் இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் ஆகும். அட்லாண்டிக் பெருங்கடலில் தனது முதல் பயணத்தை மேற்கொண்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 1912 இல் ஒரு பனிப்பாறையில் மோதிய பிறகு அது மூழ்கியது. கடந்த ஆண்டு, இந்த கப்பலின் சிதைவுகள் ரோட் தீவின் கடற்கரைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் படிக்க | இந்து மதத்திலிருந்து பிறந்ததா அவதார்  - ஜேம்ஸ் கேமரூன் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News