இவர்தான் ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபரா? யார் அந்த அப்துல் கானி பராதர்?

தலிபான்களின் அரசியல் தலைவரான அப்துல் கானி பராதர் 2010 இல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் மற்றும் கத்தார் நாட்டிற்கு மாற்றப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 06:24 PM IST
இவர்தான் ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபரா? யார் அந்த அப்துல் கானி பராதர்? title=

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் ஒட்டு மொத்த நாடும் அவர்களின் ஆட்சிக்கு கீழ் வந்துள்ளது. இதனையடுத்து அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரம் தாலிபான்கள் (Taliban) கையில் சென்றிருக்கிறது.  

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கை ஓங்கியதை அடுத்து அதிகாரத்தை அவர்களுக்கே விட்டுத்தர அதிபர் அஷ்ரப் கனி (Ashraf Ghani) ஒத்துக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவர் ஆப்கானிஸ்தானை விட்டே வெளியேறிவிட்டார்.

இதனையடுத்து காபூலில் உள்ள அதிபர் மாளிகை தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியில் தாலிபன்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்த தகவலை அந்த அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

இதற்கிடையே முல்லா அப்துல் கனி பராதர் என்பவர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ | தாலிபன் அரசுக்கு ஆதரவாக நட்புக்கரம் நீட்டும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்

இவர் தலிபான் அமைப்பை  நிறுவியவர்களில் ஒருவர். இப்போது அரசியல் தலைமையகப் பொறுப்பை நிர்வகிக்கிறார். இவர் தோஹாவில் நடைபெற்ற ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளார். தலிபான் நிறுவனர் முல்லா உமரின் (Mullah Omar) நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக முல்லா அப்துல் கனி பராதர் (Mullah Abdul Ghani Baradar) இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்பொழுது ஆப்கானிஸ்தான் (Afghanistan) தலைநகர் காபூலில் வீடு வீடாக தாலிபான்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்காப்பிற்காக பொதுமக்கள் வீடுகளில் வைத்திருக்கும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். 

அப்துல் கானி பராதர் யார்?

தலிபான்களின் அரசியல் தலைவரான அப்துல் கானி பராதர் 2010 இல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் மற்றும் கத்தார் நாட்டிற்கு மாற்றப்பட்டார்.

தாலிபான் (Taliban) இயக்கத்தின் பிறப்பிடமான கந்தஹாரில் வளர்க்கப்பட்ட பராதர், 1980 களில் சோவியத்-ஆப்கானிஸ்தான் போரில் கந்தஹாரில் போராடி, சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கான் அரசுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீனில் பணியாற்றினார்.

1994 இல், அவர் தனது முன்னாள் தளபதி முகமது ஓமருக்கு தெற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு ஆள் சேர்க்க உதவினார்.

ALSO READ | Afghan Taliban Rule: ஆப்கானில் தாலிபான் ஆட்சி தொடங்கியது, அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News