லண்டன்: பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார். அதே நேரத்தில் கன்சர்வேடிவ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் நீடிப்பார் எனத் தெரிகிறது. புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும். போரிஸ் ஜான்சன் பதவி விலகி உள்ளதால், கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வரிசையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முதலிடத்தில் உள்ளார். இவர் பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
யார் இந்த ரிஷி சுனக்?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பட்டதாரியான ரிஷி சுனக் 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக எம்.பி. ஆனார். அவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்துள்ளார். இவர்களுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
ரிஷி சுனக் மனைவி யார்?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியின் வரி விவகாரங்கள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அவரது நற்பெயர் சிதைந்துள்ளது. அதாவது சுனக்கின் மனைவிவிக்கு பிரிட்டனின் குடியுரிமை இல்லாதது விமர்சனங்களுக்கு உள்ளானது. இங்கிலாந்தை பொறுத்தவரை வேறொரு நாட்டில் பிறந்தவர் அல்லது அவர்களின் பெற்றோர் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர் என்றால், இங்கிலாந்தில் வசிக்கும் போது அவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்தினால் போதும் என விதி உண்டு. அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள், அந்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் நன்மைகளையும் இவர்களுக்கும் கிடைக்கும். அதே நேரத்தில் சொந்த நாட்டு மக்களுடன் ஒப்பிடுகையில், இவர்கள் மிகக்குறைவாக வரி செலுத்துகிறார்கள். இது தான் பிரச்சனைக்கு காரணம்.
ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை வேகமாக பரவி வந்த நிலையில், ஊரடங்கின் போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக அதிக பணத்தை செலவழித்தார் என்ற குற்றசாற்றும் இவர் மீது உண்டு. அதேநேரத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் ஆற்றிய பணியின் காரணமாக மிகவும் பிரபலமடைந்தார்.
இங்கிலாந்தின் நிதியமைச்சராக பதவி வகித்தார்
2015 ஆம் எம்.பி. ஆன இவர், குறுக்கிய காலத்திலேயே, அதாவது பிப்ரவரி 2020 க்குள் இங்கிலாந்தின் நிதியமைச்சராக உயர்ந்தார். பிரிட்டன் அமைச்சரவை பதவிக்கு நியமிக்கப்பட்டபோது தனக்கான வரலாற்றை அவர் உருவாக்கினார் என்பதில் சந்தேகமில்லை.
ஒருவேளை 42 வயதான ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த பதவியில் அமரும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை பெறுவார்.
மேலும் படிக்க: England PM: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்தியரா? பரபரப்பு ஊகங்கள் உண்மையாகுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR