95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 95 % பேருக்கு இந்த காரணத்தால் நோய் தொற்று ஏற்பட்டது என வின்ஞானிகள் தெரிவித்தனர்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 22, 2022, 08:34 PM IST
  • 95 சதவீத குரங்கு அம்மை வைரஸ் பாலியல் உறவு மூலம் பரவுவதாக ஆராய்சியில் கண்டுப்பிடிப்பு
  • இந்தியாவில் 3 ஆவது குரங்கு அம்மை நோயாளி பதிவு
95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன! வெளியாகிய அதிர்ச்சி தகவல்  title=

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவலின் தாக்கத்தால் உலக நாடுகளே தத்தளித்து வருகின்றன. இன்று வரை கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கங்களோடு காணப்படுகின்றதே தவிர நாடுகளை விட்டு முழுவதும் வெளியேறவில்லை கொரோனா பாதிப்பு.

இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே குரங்கு அம்மை குறித்து புரளிகளும், வதந்திகளும் அதிக அளவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக குரங்கு அம்மையின் பரவல் தீவிரமெடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

இதுவரை உலகம் முழுவதும் உள்ள 71 நாடுகளில் 15,000 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | மேனேஜரால்தான் சூர்யாவுக்கு தேசிய விருதா?... சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை

இதற்கிடையில், குரங்கு ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டது. இந்தியாவில் இன்று கேரள மாநிலத்தில் 3வது குரங்கம்மை நோயாளியை அடையாளம் கண்டுள்ளனர். மத்திய அரசு, கேரள நிர்வாகத்துடன் இணைந்து சோதனையை முடுக்கிவிட்டு, வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையில், லண்டன் குயின் மேரி பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகளால் குரங்கு அம்மை பரவல் குறித்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஏப்ரல் 27 - ஜூன் 24க்கு இடையில் 16 நாடுகளில் 528 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று உள்ளவர்களை பரிசோதித்து கண்காணிப்பில் வைக்கப்பட்டது. இந்த சோதனையில், 32 பேரில் 29 பேரின் விந்தணுவில் குரங்கு அம்மை வைரஸின் டிஎன்ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி, 95% நோயாளிகளில் உடலுறவு மூலம் வைரஸ் பரவியது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் வைரஸ் பரவுவதை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தாலும், பொறுப்பற்ற பாலியல் நடத்தையால், குறிப்பாக ஒரே பாலினத்தவர்களிடையே குரங்கு அம்மை நோய் பரவுகிறது என்று அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ’நாயகன் மீண்டும் வர’ விக்ரம் பீஜிஎம்மில் சூர்யாவுக்கு குவியும் வாழ்த்து - Video

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News