அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன், ஹண்டர் பைடன், துப்பாக்கி வாங்கும்போது பொய் சொன்னதாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை, பதவியில் இருக்கும் அதிபரின் பிள்ளைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை என்பதால், இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
வரி ஏய்ப்பு, வெளிநாட்டு வணிக பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் ஹண்டர் பைடன் சட்டப்பூர்வ ஆய்வை எதிர்கொள்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தம் ஜூலை மாதம் திடீரென முறிந்தது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சரியான நேரத்தில் வரி செலுத்தத் தவறியதற்காக அவர் மீது இரண்டு தவறான குற்றச்சாட்டுகள் உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும்போது ஒரு படிவம் நிரப்பப்பட வேண்டும். அதில், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படாது. ஜோ பைடன் - ஜில் பைடன் தம்பதிகளின் 53 வயதான மகன் ஹண்டர், போதைப்பொருள் பயன்படுத்திய காலத்தில், துப்பாக்கி வாங்கினார்.
ஆனால், கோகோயின் அதிகமாகப் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட அவர், கட்டாயமாக நிரப்பப்பட வேண்டிய படிவத்தில், போதைப்பழக்கம் தனக்கு இல்லை என்று பொய் சொன்னதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஃபெடரல் சட்டங்களின்படி, போதைப்பொருள் உபயோகிக்கும் போது அத்தகைய ஆவணங்களில் பொய் சொல்வது அல்லது துப்பாக்கி வைத்திருப்பது குற்றமாகும்.
மேலும் படிக்க | சீன ஜி 20 பிரதிநிதிகளிடம் இருந்த மர்ம சாதனங்கள் எதற்கு? டெல்லி தாஜ் ஹோட்டல் பரபரப்பு
அக்டோபர் 2018 இல் டெலாவேர் துப்பாக்கி கடையில் கோல்ட் கோப்ரா ஸ்பெஷல் ரிவால்வரை வாங்கியபோது, "துப்பாக்கியை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர் இல்லை மற்றும் ஊக்கமருந்து போதைப்பொருளுக்கு அடிமையாகவில்லை" என்று அவர் பொய்யாகக் கூறியதாக ஹண்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி குற்றங்களுக்கான தண்டனைகள் பொதுவாக அதிகபட்ச தண்டனைகளை விட குறைவாக இருக்கும்.
ஹண்டர் பைடன் மீதான முதற்கட்ட விசாரணை எப்போது, எங்கு நடைபெறும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக கூறும் ஹண்டர் பைடனின் வழக்கறிஞர் அபே லோவெல், குடியரசுக் கட்சியினரின் முறையற்ற மற்றும் பாரபட்சமான தலையீட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறைககூறினார்.
மேலும் படிக்க | ஜில் பிடனுக்கு கொரோனா... ஜோ பிடனின் இந்திய பயணம்
மேலும், ஹண்டர் பைடன் சட்டத்தை மீறவில்லை என்றும், அவர் துப்பாக்கியை வைத்திருப்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்றும் கூறினார். ஆனால், ஒரு வழக்கறிஞர், கற்பனை செய்யக்கூடிய அனைத்து அதிகாரங்களுடனும், அரசியல் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுப்பது நமது நீதி அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஹண்டர் பிடன், இதுவரை வெள்ளை மாளிகையிலோ அல்லது தனது தந்தையின் நிர்வாகத்திலோ ஒருபோதும் பதவி வகிக்கவில்லை. ஆனால், மகன் மீதான குற்றச்சாட்டுகளும் விசாரணையும் அதிபர் ஜோ பைடனுக்கு ஒரு தலைவலியாக மாறிவிட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பாதிக்கப்படும்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், குடியரசுக் கட்சியினர் அமெரிக்க அதிபர் ஜொ பைடன் மீதான குற்றச்சாட்டு விசாரணையை அறிவித்தனர். அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் என்ன? 2009-17 வரை துணை அதிபராகப் பணியாற்றியபோது, தனது மகனின் வணிக நடவடிக்கைகள் தொடர்பாக அவர் பொய் சொன்னார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், மகன் மீதான வழக்கு விசாரணையில் தந்தையின் பெயரும் அடிபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியா வந்துள்ள ஜோ பிடன்! பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ