US Navy assault ship தீப்பிடித்ததில் 17 மாலுமிகள், 4 சிவிலியன்கள் காயமடைந்தனர்

San Diego துறைமுகத்தில் நின்றுக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல மாலுமிகளும், சிவிலியன்களும் காயமடைந்தனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2020, 08:20 PM IST
  • San Diego துறைமுகத்தில் நின்றுக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக் கப்பலில் பயங்கர தீ விபத்து
  • விபத்து ஏற்பட்ட போது கப்பலில் சுமார் 160 மாலுமிகள் இருந்தனர்
  • படு காயமடைந்த 17 மாலுமிகளும் 4 சிவிலியன்களும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதி
US Navy assault ship தீப்பிடித்ததில் 17 மாலுமிகள், 4 சிவிலியன்கள் காயமடைந்தனர் title=

San Diego துறைமுகத்தில் நின்றுக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல மாலுமிகளும், சிவிலியன்களும் காயமடைந்தனர்

ஜூலை 12ஆம் தேதியன்று காலை 8:30 மணியளவில்  USS Bonhomme Richard (LHD 6) கப்பலில் தீப்பற்றியது. விபத்து ஏற்பட்ட போது கப்பலில் சுமார் 160 மாலுமிகள் இருந்தனர்.
படு காயமடைந்த 17 மாலுமிகள் மற்றும் நான்கு சிவிலியன்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீதமுள்ள கப்பல் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக The Chief Naval Operations (CNO) தெரிவித்தார்.

 

உள்ளூர், தளம் மற்றும் கப்பல்களுக்கான பிரத்யேக தீயணைப்பு வீரர்கள் துரிதமாக எடுத்த உடனடி நடவடிக்கையால் சேதம் மட்டுப்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பி.எச்.ஆர் கப்பலின் மாலுமிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் எங்கள் அவசரகால அதிரடிப் படையினர் தொடர்ந்து தீயை எதிர்த்துப் போராடுகின்றனர்" என்று அமெரிக்க கடற்படை சி.என்.ஓ அட்மிரல் மைக்கேல் எம். கில்டே (Admiral Michael M. Gilday, US Navy CNO) ட்வீட் செய்துள்ளார்.

Read Also | கொரோனா, தரவு பாதுகாப்பு, cyber safety பற்றி பிரதமரும், சுந்தர் பிச்சையும் ஆலோசனை

"தற்போது இரண்டு தீயணைப்பு குழுக்கள் கப்பலில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன" என்று பெடரல் ஃபயர் சான் டியாகோ பிரிவு தலைவர் ராப் பாண்டுரான்ட் (Federal Fire San Diego Division Chief Rob Bondurant) தெரிவித்தார்.

"தனது குழுவினருடன் பிற கப்பல்களின் பணியாளர்களையும் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது Federal Fire. நீர்ப்பரப்பில் இருந்து தீயை எதிர்த்துப் போராடுவதற்காகவும், நெருப்பு எங்கு தொடங்கியது என்பதை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், @NavyRegSW படகுகளும் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுள்ளன” என்று Naval Surface Forces ட்வீட் செய்துள்ளது.
தீ ஏற்பட்டதற்க்கான காரணம் மற்றும் தீ முதலில் எங்கு ஏற்பட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை.

Trending News