இனரீதியாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக, அந்நாட்டு பார்லிமென்டின் பிரதிநிதித்துவ சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது!
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 240 ஓட்டுகளும், எதிராக 187 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் ட்விட்டரில் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'வெளிநாடுகளை பூர்வீகமாக கொண்ட, சில பெண், எம்.பி.,க்கள், நமது அரசு எப்படி செயல்பட வேண்டும் என கருத்து கூறுகிறார்கள். அவர்கள், தங்களுடைய பூர்வீக நாடுகளுக்குச் சென்று, அங்கு குற்றங்களை குறைத்து, ஊழலை ஒழித்துவிட்டு, பிறகு இங்கு வரட்டும்' என பதிவிட்டு இருந்தார்.
இந்த டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன ரீதியில் ட்ரம்ப் பேசியுள்ளதற்கு, எதிர்ப்பு எழுந்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ட்ரம்ப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க பிதிநிதித்துவ சபையில், ''தங்கள் நிறம் குறித்த பயத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்ப்பின் இந்த கருத்துகள் அதிகரித்துள்ளன'' என அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சியினர் அதிகம் உள்ள இந்த சபையில், ட்ரம்ப்பிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 240 ஓட்டுகளும், எதிராக 187 ஓட்டுகளும் கிடைத்துள்ளது உலக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்சியின் நான்கு எம்.பி.,க்களும் ஒரு சுயேட்சை எம்.பி.,யும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.