அமெரிக்கா: அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார்.
உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
டிரம்ப் அதிக தொகுகளில் முன்னிலை பெற்றார். குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெரிய மாகாணங்களான அதிக ஓட்டுகள் கொண்ட டெக்சாஸ், புளோரிடாவை கைப்பற்றினார். ஜனநாய கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக ஓட்டுகள் கொண்ட கலிபோர்னியாவை கைப்பற்றினார்.
இறுதியாக வந்த நிலவரப்படி ஹிலாரி 215 வாக்குகளுடன் பின் தங்கி தோல்வி அடைந்தார். 264 இடங்களில் வெற்றி பெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அதிபராக உள்ள பராக் ஒபாமா வின் பதவிக் காலம் இந்த ஆண்டு முடிகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் 45-வது அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.
ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.