World War: யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள்

77 years of Hiroshima: உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2022, 12:22 PM IST
  • ஜப்பானின் போர் துயரம் தொடங்கி 77 ஆண்டுகள் நிறைவுற்றது
  • உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவுநாள்
  • உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும்
World War: யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள் title=

உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய ஆயுதப் போட்டிக்கு அஞ்சும் சர்வதேச நாடுகளின் கவலைகளுக்கு மத்தியில் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8:15 மணிக்கு, அமெரிக்காவின் B-29 போர் விமானம் எனோலா கே, "லிட்டில் பாய்" என்ற புனைப்பெயர் கொண்ட குண்டை வீசி ஹிரோஷிமா நகரத்தை அழித்தது. அந்த அணுகுண்டு தாக்குதலை அனுசரிக்கும் வகையில், ஹிரோஷிமாவில் மணிகள் ஒலிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.  

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், நேற்று உக்ரேனிய அணுமின் நிலையத்தின் மீது ஷெல் துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. இது, உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடைபெற்றதை அதிகம் நினைவுபடுத்துவதாக உள்ளது.  

1945 ஆகஸ்ட்ம் ஆண்டு இறுதிக்குள் 1,40,000 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஹிரோஷிமா நகரத்தின் மையத்தில் உள்ள அமைதிப் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். அவர்களுடன் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெசும் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க | அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தியது உக்ரைனா ரஷ்யாவா?

"அணு ஆயுதங்கள் முட்டாள்தனமானவை. அவை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது.  மரணம் மற்றும் அழிவு மட்டுமே. முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு, 1945 இல் இந்த நகரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று குட்டெரெஸ் கூறினார்.

உக்ரைன் மீதான போரை தொடுத்திருக்கும் ரஷ்யாவை இந்த ஆண்டு நினைவு விழாவிற்கு அழைக்கவில்லை என்று ஹிரோஷிமா மேயர் கசுமி மாட்சுய் தெரிவித்தார். மாஸ்கோவின் இராணுவ நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அவர், "சர்வதேச அளவில் அமைதி என்பது அணுசக்தியை தடுப்பதில் தான் இருக்கிறது என்ற கருத்து மேலும் வலுவாகிறது" என்று மேலும் கூறினார்.

"உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா,  மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை மறந்து, போர்க் கருவிகளாக மக்களைப் பயன்படுத்துகிறார், தங்கள் நாட்டு மக்களின் நலனை மட்டுமல்ல, வேறு நாட்டில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களிலும் அவர் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்" என்று கூறினார்.

மேலும் படிக்க | கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி

ஹிரோஷிமாவில் நடைபெற்ற பிழைகள், அணு ஆயுதங்கள் இல்லாத அமைதியான உலகத்தை அடைவதற்கான மனிதகுலத்தின் உறுதியை அதிகரிக்க வேண்டும். அணு ஆயுதங்கள் இல்லாத அமைதியான உலகத்தை அடைவது அவசியம். ராணுவ பலம் இல்லாமல் பராமரிக்கப்படும் அமைதி என்ற இலட்சியத்தை கைவிடுவது என்பது  மனித இனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே இருக்கும். 

1945 அன்று ஆகஸ்ட் 6ம் தேதியன்று காலை 8:15 மணிக்கு, அமெரிக்க B-29 போர் விமானம் எனோலா கே "லிட்டில் பாய்" என்ற புனைப்பெயர் கொண்ட குண்டை 3,50,000 மக்கள் தொகை கொண்ட நகரத்தின் மீது வீசி, நகரை அழித்தது. காயங்கள் மற்றும் கதிர்வீச்சு தொடர்பான நோய்களால் மேலும் ஆயிரக்கணக்கானோர் பின்னர் உயிரிழந்தனர்.

77 வது ஆண்டு ஹிரோஷிமா தாக்குதல் நினைவு நாளை அனுசைத்தபோது, கடுமையான கோடைக் காற்றுக்கு நடுவில் அமைதி மணி ஒலித்தது. ஹிரோஷிமாவில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உட்பட கூடியிருந்த அனைவரும், சுமார் ஏழரை தசாப்தத்திற்கு முன்பு அணுகுண்டு வெடித்த அதே நேரத்தில் மௌனத்தைக் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஹிரோஷிமா பேரழிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 அன்று அமெரிக்க இராணுவம் நாகசாகியில் அணுகுண்டு வீசி 75,000 க்கும் அதிகமான மக்களை கொன்றது. ஜப்பான் ஆறு நாட்களுக்குப் பிறகு சரணடைந்ததும் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்க |  ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News