பாகிஸ்தானின் அவலநிலை தொடர்கிறது! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்

Pakistan Floods: பாகிஸ்தானில் ஏற்பட்ட எதிர்பாராத மழை வெள்ளத்தில் 380 குழந்தைகள் உட்பட 1100 பேர் பலி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 31, 2022, 03:18 PM IST
  • பாகிஸ்தானில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளம்
  • கட்டுக்கடங்கா மழையினால் கட்டுண்டு கிடக்கும் பாகிஸ்தான் மக்கள்
  • மழை வெள்ளத்துக்கு 380 குழந்தைகள் பலி
பாகிஸ்தானின் அவலநிலை தொடர்கிறது! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் title=

கராச்சி: பாகிஸ்தானில் கடுமையான பருவமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், சில நாட்களில் 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் கொன்றது. பாகிஸ்தானின் சார்சடாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து, நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்த குடும்பங்கள் வாழ்க்கையை இனி எப்படி எதிர் கொள்ளப்போகிறோம் என்று கவலையுடன் நாட்களை கழித்துக் கொண்டு இருக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வரும் மக்களின் நிலைமையை பார்வையிட, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளார்.

50,000 க்கும் மேற்பட்ட மக்களை இரண்டு அரசாங்க தங்குமிடங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். வடக்கு பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 300 க்கும் மேற்பட்டவர்கள் விமானத்தின் மூலம் மீட்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | இலங்கை: காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 2000 நாட்களை தாண்டி தொடரும் போராட்டம்

நிவாரண பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை தற்போது உதவி செய்ய முன்வந்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், வணிக இடங்கள், பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மழை அழித்துவிட்டது. இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பாகிஸ்தான் துன்பத்தில் மூழ்கியுள்ளது" என்று கூறினார். 160 மில்லியன் டாலர் உதவித்தொகை வேண்டும் என்று தெற்காசிய நாடான பாகிஸ்தான் சர்வதேச அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்ததாக அவர் மேலும் கூறினார். அதிகாரிகளின் கூற்றுப்படி, குடெரெஸ் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க பாகிஸ்தான் ராணுவம் உதவி மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர்கள் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அணுக முடியாத இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விமானம் மூலம் போடப்படுகின்றன. சிந்து மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

"நாட்டில் மூன்றில் ஒரு பங்கு உண்மையில் தண்ணீருக்கு அடியில் உள்ளது" என்று, பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், செய்தியாளர் சந்திப்பின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 380 குழந்தைகள் இறந்ததை உறுதிப்படுத்தினார்.

மேலும் படிக்க | சீன உதவியை விட இந்திய உதவிகளே எமக்கு அதிகம் கிடைத்துள்ளது: மீனவ கூட்டுறவு சங்க செயலாளர் 

வெள்ளத்தை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் அமெரிக்க அரசு 30 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்குவதாக, அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது. இதற்கிடையில், வெள்ள சேதத்தின் மதிப்பு கிட்டத்தட்ட $10 பில்லியன் என்று ஷெரீப் அரசாங்கம் கணித்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் இரண்டு மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தேசிய பேரிடர் அமைப்பின் தலைவர் ஜெனரல் அக்தர் நவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் சீனா! நடவடிக்கை எடுக்க கோரும் சீமான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News