புதுடெல்லி: புதன்கிழமை (ஆகஸ்ட் 4, 2021) வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், குவாட் (Quad) நாடுகள் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் குறைந்தது 100 கோடி டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்ய உள்ளது. உலகெங்கிலும் உள்ள ஏழைகளுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் தடுப்பூசி கிடைக்க இது உதவியாக இருக்கும். குவாட் குழுவில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue - Quad) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா மூலோபாய மன்றம் ஆகும்.
"Quad நாடுகள் கூட்டமைப்பு 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்தியாவில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது" என்று வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜென் சாகி (Jen Psaki ) செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், அமெரிக்கா இதுவரை 110 மில்லியன் தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கியுள்ளது எனக் கூறினார்.
"இது வேறு எந்த நாடும் இணைந்து தடுப்பூசி வழ்ங்கியதை விட அதிகம். மேலும் நாங்கள் வாங்கிய 50 கோடி டோஸ் ஃபைசர் நன்கொடையாக் வழங்குகிறோம். இந்த மாத இறுதியில் நாங்கள் அதை நன்கொடையாக வழங்கத் தொடங்குவோம்" என்று வெள்ளை மாளைகை செய்தித் தொடர்பாளர் சாகி கூறினார் .
மற்ற நாடுகளை விட உலக அளவில் அமெரிக்கா "மிக அதிக" நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று வலியுறுத்தும் அதே வேளையில், உலக சமூகம் இதை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
Also Read | COVID-19 Update August 04: இன்றைய கொரோனா பாதிப்பு 1,949; 26 பேர் உயிரிழப்பு
இது குறித்து மேலும் கூறுகையில், " உலகளாவிய கூட்டங்களில், அது UNGA அல்லது G20 என எந்த வித மாநாட்டு அல்லது கூட்டமாக இருந்தாலும், அமெரிக்கா உட்பட உலகின் வலர்ந்த நாடுகள், தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்து உதவ வேண்டுமெ என, தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது என" சாகி மேலும் கூறினார்.
" அமெரிக்கா, தனது சொந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதோடு, மற்ற நாடுகளுக்கு உதவவும் முடியும் என நம்புகிறது. ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய எங்களிடம் போதுமான சப்ளை உள்ளது. மக்கள்தொகையின் ஒரு பகுதியினருக்கு பூஸ்டர் டோஸ் பரிந்துரைத்து FDA முடிவு செய்தால், அதற்கும் எங்களிடம் போதுமான சப்ளை உள்ளது "என்று சாகி கூறினார்.
Also Read | தமிழகத்தில் 3வது அலையை தடுக்க நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR