ஆப்கானிஸ்தானின் (Afghanistan) பாமியனில் சந்தையில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் பாமியனில் நகரின் மையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகிலுள்ள சந்தைப் பகுதியில் இரண்டு குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் வந்துள்ளன.இரண்டு காந்த குண்டுகள் (magnetic bombs) வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் 6 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் முழுவதும் சமீபத்திய நாட்களில் வன்முறைகள் அதிகரித்துள்ளது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தலிபான்கள் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் தலிபான் அமைப்பு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. ஆனால் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.
வன்முறை அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் "உடனடி, நிபந்தனையற்ற போர்நிறுத்தம் அவசியம்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் (United Nations Secretary-General Antonio Guterres) வலியுறுத்தினார், தலிபானுடனான தோஹா சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு ஏதுவாக சமாதான சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
"பெண்கள், இளைஞர்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொண்ட பிரதிநிதித்துவம் கொண்ட குழு, ஒரு அர்த்தமுள்ள நிலையான அமைதிக்கான சிறந்த நம்பிக்கையை வழங்குகிறது," என்று குடெரெஸ் மேலும் கூறினார். "அமைதியை நோக்கிய முன்னேற்றம் முழு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும், மேலும் இது இடம்பெயர்ந்த மில்லியன் கணக்கான ஆப்கானியர்களின் பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் கண்ணியமான வருவாயை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இருக்கும்" என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி மாதம் தலிபான் மற்றும் டிரம்ப் நிர்வாகம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றுக் கொண்ட அமெரிக்கா, அனைத்து வெளிநாட்டு படைகளையும் திரும்பப் பெற ஒப்புக் கொண்டது. எனவே, அமெரிக்க துருப்புக்கள் (US troops) விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.
எது எப்படியிருந்தாலும், ஆப்கானில் தீவிரவாத தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் தொடர்வது உலகளவில் கவலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் கா (Lashkar Gah) மீது தலிபான்கள் (Taliban) பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR