Microsoft, Tik-Tok டீலில் அமெரிக்க அரசாங்கத்திற்கு பங்கு வேண்டும்: Trump-ன் வினோத கோரிக்கை!!

டிக்-டாக்-ஐ மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கும் வர்த்தக ஒப்பந்தம் வெற்றியடைந்தால், அந்த பரிமாற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு அமெரிக்க கருவூலத்திற்கு வந்து சேர வேண்டும் என்ற வினோத கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 03:27 PM IST
  • திங்களன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசினார்.
  • மைக்ரோசாப்டின் இந்திய-அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நடெல்லாவுடனும் டிர்மப் பேசினார்.
  • டிக்டோக் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது - பீட்டர் நவாரோ
Microsoft, Tik-Tok டீலில் அமெரிக்க அரசாங்கத்திற்கு பங்கு வேண்டும்: Trump-ன் வினோத கோரிக்கை!! title=

டிக்-டாக்-ஐ மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கும் வர்த்தக ஒப்பந்தம் வெற்றியடைந்தால், அந்த பரிமாற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு அமெரிக்க கருவூலத்திற்கு வந்து சேர வேண்டும் என்ற வினோத கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) முன்வைத்துள்ளார். டிக்-டாக்-ஐ எந்த அமெரிக்க நிறுவனமும் வாங்காத பட்சத்தில், அந்த செயலி செப்டம்பர் 15-க்குப் பிறகு அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் டிரம்ப் கெடு வைத்துள்ளார்.

திங்களன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசினார்.  தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (Microsoft), டிக்டாக்கின் (Tik-Tok) அமெரிக்க உரிமைகளை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், தற்போது கூறப்பட்டுள்ள 30 சதவிகிதம் அல்லாமல், முழுமையாக 100 சதவிகித பரிவர்த்தனை நடக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் விரும்புகிறார்.

மைக்ரோசாப்ட் அல்லது வேறு யாராவது டிக்-டாக்கை வாங்க பொருத்தமான ஒப்பந்தத்தை உருவாக்க முடியாவிட்டால், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் டிக்டோக் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார். இது குறித்து, மைக்ரோசாப்டின் இந்திய-அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நடெல்லாவுடனும் அவர் பேசினார். ரெட்மண்ட்டை தலைமையிடமாகக் கொண்டுள்ள மைக்ரோசாப்ட், ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், நடெல்லாவிற்கும் டிரம்பிற்கும் இடையிலான உரையாடலைத் தொடர்ந்து, நிறுவனம், அமெரிக்காவில் டிக்டோக்கை வாங்குவதை ஆராய்வதற்கான விவாதங்களைத் தொடரத் தயாராக உள்ளது என்று கூறியது.

டிக்டோக் மற்றும் பிற சீன செயலிகளுக்கு இந்தியா சமீபத்தில் தடை விதித்தது. இந்த முடிவு அமெரிக்காவில் ஒரு தேசிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும் இதையே தாங்களும் பின்பற்ற வேண்டும் என அமெரிக்காவிலும் கோரிக்கை அதிகரித்து வருகிறது.

டிக்டோக் மற்றும் யு.சி. ப்ரௌசர் உள்ளிட்ட சீன இணைப்புகளைக் கொண்ட 59 செயலிகளை ஜூன் மாதத்தில் இந்தியா தடை செய்தது. அவை நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தானவை என இந்தியா கூறியது.

முன்னதாக, வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகரும் அதிபரின் உதவியாளருமான பீட்டர் நவாரோ, டிக்டோக் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறினார்.

ALSO READ: H-1B visa தொழிலாளர்களுக்கு ஆப்பு... US மக்களுக்கு மட்டுமே இனி வேலை வாய்ப்பு..!

Trending News