மத்திய ஆசியாவில் உள்ள உஸ்பெகிஸ்தானின் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி, சீன செயலியான டிக்டாக்கை முழுமையாக தடை செய்ய புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளது. டிக்டாக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று கூறியுள்ள அக்கட்சி குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக டிக்டாக் இருப்பதாக கூறுகிறது.
ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உஸ்பெகிஸ்தான் அரசியல் கட்சியின் அறிக்கையை மேற்கோள் காட்டி, "இணையத்தில் குற்றங்களைத் தவிர்க்க, டிக்டாக் போன்ற மொபைல் செயலிகளை முற்றிலுமாகத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது, அவை நன்மைகளை விட தீமைகள் அதிகம்." என உஸ்பெகிஸ்தானின் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி குறிப்பிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது
இதனுடன், இந்த சீன (China) மொபைல் செயலிக்கு எதிராக, நாட்டில் தற்போது இணைப்பு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், டிக்டோக்கர்கள் VPN செயலியை பயன்படுத்தி நெட்வொர்க்கை அணுகுவதற்கான வழிமுறைகள் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ALSO READ | வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கழிப்பறைக்கு ‘24 மணி’ நேர காவல்!
கடந்த மாதம், டிக்டோக்கில் பகிரப்பட்ட "ஒழுக்கமற்ற வகையிலான உள்ளடக்கத்தை" தடை செய்ய பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தின் கீழ் பாகிஸ்தான் நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தது. டிக்டோக்கில் 28.9 மில்லியன் வீடியோக்கள் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தால் நீக்கப்பட்டுள்ளஎன தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் நெறிமுறையற்ற உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்காக, 1.4 மில்லியன் டிக்டாக் (TikTok) கணக்குகள் பாகிஸ்தானால் முடக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசு டிக்டாக்செயலியை தடைசெய்தது. பின்னர் டிக்டாக் நிறுவனம் வழங்கிய உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு, 10 நாட்களுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது.
ALSO READ | ‘நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’: அதிபர் கிம்மின் லேட்டஸ்ட் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR