WW3: மூன்றாம் உலகப் போர் அச்சம்! பாதுகாப்பு சுரங்கங்கள் ரெடி... பீதியில் அரச குடும்பம்

மூன்றாம் உலகப் போரின் அச்சம் அதிகரித்துள்ளன....முன்னெச்சரிக்கையாக ரகசிய சுரங்கங்கள், எமர்ஜென்சி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2022, 06:11 AM IST
  • தீவிரமாகும் ரஷ்யா - உக்ரேன் பிரச்சனை
  • வலுக்கும் போர் அபாயங்கள்
  • ரகசிய சுரங்கங்கள் தயார்
WW3: மூன்றாம் உலகப் போர் அச்சம்! பாதுகாப்பு சுரங்கங்கள் ரெடி... பீதியில் அரச குடும்பம் title=

புதுடெல்லி: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் போன்ற சூழல் ஏற்பட்டால், எந்த நேரத்திலும் மூன்றாம் உலகப் போர் வரலாம். இத்தகைய சூழ்நிலையில், பிரிட்டன் அரச குடும்பம் தங்கள் பாதுகாப்பில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது.

மூன்றாம் உலகப் போரின் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், உயிரியல் போர் வருமோ என்ற பயத்தில் முன்னெச்சரிக்கையாக ரகசிய சுரங்கங்கள், எமர்ஜென்சி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜின் டியூக் மற்றும் டச்சஸ் ஆகியோர் தங்கள் குடும்பங்களை உயிரியல் போரின் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க தங்கள் கென்சிங்டன் அரண்மனை வீட்டில் (Kensington Palace home) பாதுகாப்பு அம்சங்களைக் உருவாக்கியுள்ளனர்.

ALSO READ | மாயமாய் மறைந்த மதுவின் கடவுள்! 50 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிலை

எமர்ஜென்சி அறைகள் மற்றும் இரகசிய சுரங்கங்கள் 
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் தங்கள் குடும்பத்தை உயிரியல் போரிலிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கென்சிங்டன் அரண்மனை வீட்டில் ஒரு பீதி அறை மற்றும் ரகசிய சுரங்கப்பாதைகளை நிறுவியுள்ளனர் என்று டெய்லி ஸ்டார் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

பீதி அறையில் தப்பிக்கும் சுரங்கப்பாதையுடன் காற்று வடிகட்டுதல் அமைப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.

வில்லியம் சிறுவயதில் ரகசிய சுரங்கங்களை பயன்படுத்தினார்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் சிறு வயதிலேயே தனது சகோதரர் ஹாரி மற்றும் தாய் டயானாவுடன் அரண்மனையை விட்டு வெளியேறி மெக்டொனால்டுக்கு செல்ல ரகசிய சுரங்கப்பாதையைப் பயன்படுத்தினார்.

இங்கிலாந்து சிம்மாசனத்திற்கான அடுத்த வாரிசு தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார், அரச பட்டத்திற்கான அடுத்த வாரிசாக பிரிட்டன் அரசின் மகனும் வில்லியத்தின் தந்தை சார்லஸ் இருக்கிறார். 

ALSO READ | காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!

இரண்டாவது வாரிசான வில்லியம்ஸ் மற்றும் மூன்றாவது வாரிசாக வில்லியம்சின் மகன் ஜார்ஜ் என அரச பட்டத்திற்கான வாரிசுகளில் இருவர் இருக்கும் வீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பது ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.  

எனவே பாதுகாப்புக்காக இளவரசர் வில்லியம் இருக்கும் அரண்மனையின் பீதி அறைகள் 18 அங்குல தடிமன் கொண்ட தோட்டா எதிர்ப்பு எஃகு சுவர்களால் கட்டப்பட்டிருக்கின்றன. 

கேம்பிரிட்ஜில் மட்டுமல்ல, பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மகாராணியை பாதுகாக்க  இரண்டு பீதி அறைகள் (Panic room) உள்ளன. ஒன்று வின்ட்சர் கோட்டையிலும் மற்றொன்று பக்கிங்ஹாம் அரண்மனையிலும் உள்ளன. இந்த அறைகள் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன.

இந்த அறைகள் 18 அங்குல தடிமன் கொண்ட புல்லட் எதிர்ப்பு மற்றும் தீ தடுப்பு எஃகு சுவர்களால் சூழப்பட்டுள்ளன. அவை நச்சு வாயு, வெடிகுண்டுகள் அல்லது பயங்கரவாத தாக்குதல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ | துரோகிகள் சூழ் உலகு; மனைவியின் கடைசி ஆசையை கேட்டு நொந்து போன கணவன்

பாதுகாப்பான தகவல் தொடர்பு, படுக்கை, சலவை உபகரணங்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் என அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளன.

விமானத் தாக்குதல் 
பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் வாரிசான இளவரசர் சார்லஸுக்கும் ஹைக்ரோவ் ஹவுஸில் ஒரு ரகசிய அறை உள்ளது. இது ஒரு ஷிப்பிங் கொள்கலனின் அளவிலான இரும்பு அறை உள்ளது. 

சில பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, ஹைக்ரோவ் ஹவுஸில் உள்ள இரகசிய பீதி அறை மிகவும் வலுவானது, அது வான்வழித் தாக்குதல் அல்லது பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானாலும், உள்ளே இருக்கும் அரச குடும்பத்தினருக்கு எந்தவித உயிர் ஆபத்தும் ஏற்படாது.

ALSO READ | வெளிநாட்டில் செட்டில் ஆக வட்டியில்லா கடன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News