பஸ்ஸை நடமாடும் வீடாக மாற்றிய குடும்பம்!

பழைய ஸ்கூல் பஸ்சை வாங்கி நடமாடும் வீடாக்கியுள்ள குடும்பம் ஒன்று அந்தப் பேருந்தில் சுற்றி வருவது மக்களிடையே ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 06:26 PM IST
  • வீட்டிலிருந்தே வேலை, ஆன்லைன் பாடம் என கொரோனா உலகை மாற்றியிருப்பதால், ஸ்பைக்கும் எலிசபெத்தும் ஒரு ஐடியா செய்தார்கள்.
  • அழகிய நடமாடும் வீட்டை உருவாக்க அவர்கள் 2 மாதங்கள் செலவழித்திருக்கிறார்கள்.
பஸ்ஸை நடமாடும் வீடாக மாற்றிய குடும்பம்!  title=

அமெரிக்கா :  பழைய ஸ்கூல் பஸ்சை வாங்கி நடமாடும் வீடாக்கியுள்ள குடும்பம் ஒன்று அந்தப் பேருந்தில் சுற்றி வருவது மக்களிடையே ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.  னித வாழ்க்கையை மொத்தமாக தடம் மாற்றி இருக்கிறது இந்த கொரோனா பெருந்தொற்று. இந்த உயிர் கொல்லி தொற்று காரணமாக, பலர் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி இருக்கிறார்கள்.  சிலர் கட்டாயத்தால் மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதே நிதர்னம்.

அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத்தும் அவர் பார்ட்னர் ஸ்பைக்கும் அவர்கள் குழந்தைகளும் அப்படித்தான், தங்கள் வாழ்க்கையை சுகமாக மாற்றியிருக்கிறார்கள்.  வீட்டிலிருந்தே வேலை, ஆன்லைன் பாடம் என கொரோனா உலகை மாற்றியிருப்பதால், ஸ்பைக்கும் எலிசபெத்தும் ஒரு ஐடியா செய்தார்கள். அதாவது நடமாடும் வீட்டை உருவாக்க முடிவு செய்தார்கள்.

bus

அதற்காக பழைய ஸ்கூல் பஸ் ஒன்றை விலைக்கு வாங்கினார்கள். அதன் உள்ளமைப்பை, குளியலறை, மூன்று பெட்ரூம், சிறிய சமையல் அறை என மாற்றினார்கள்.  மேலே, மின்சாரப் பயன்பாட்டிற்கு சோலார் பேனல்களையும் பொருத்தினார்கள்.இப்போது நடமாடும் வீடு ரெடி. இந்த அழகிய நடமாடும் வீட்டை உருவாக்க அவர்கள் 2 மாதங்கள் செலவழித்திருக்கிறார்கள்.

bus

இது குறித்து எலிசபெத் கூறுகையில், 'எனது கணவருக்கு சிறு வயதில் இருந்தே பேருந்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது ஆசை. இதனால் பழைய பேருந்தை 3,500 அமெரிக்க டாலருக்கு வாங்கினோம். முதலில் பேருந்தின் உள் வடிவமைப்பு, வெளிப்புறம், எங்களுக்கு பிடித்த நிறம் என சுமார் 15,000 டாலர் செலவு செய்து அனைத்தையும் மாற்றினோம்.  குளியலறை, மூன்று மெத்தைகள், சிறிய சமையல் அறை மாதிரியானவை இந்த பேருந்தில் உள்ளது. மின்சார பயன்பாட்டிற்கு சோலார் பேனல்களும் பொருத்தப்பட்டுள்ளது.  இப்போது 16 மாநிலங்களுக்கு இந்த பஸ் மூலம் பயணம் செய்திருக்கிறோம். இந்த அட்வெஞ்சர் புதுவித அனுபவத்தை தருகிறது' என்று அவர் கூலாக கூறியுள்ளார்.

ALSO READ வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் மஸ்கட் நகரம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News