தாலிபானின் புதிய உத்தரவு: 10 வயதுக்கு மேல் பெண்களுக்கு படிக்கத் தடை

Taliban on Education: தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 5, 2023, 04:46 PM IST
  • பள்ளிகள் தவிர, பெண்களுக்கான அழகு நிலையங்களுக்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
  • இது தவிர, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதையும் தாலிபான்கள் நிறுத்தினர்.
தாலிபானின் புதிய உத்தரவு: 10 வயதுக்கு மேல் பெண்களுக்கு படிக்கத் தடை title=

கல்விக்கு தாலிபானின் தடை: தாலிபான் என்றால் வளர்ச்சியின் எதிரி, தாலிபான் என்றால் நவீனத்துவத்தின் எதிரி. தாதலிபான் என்றால் பெண்களின் எதிரி என்று பொருள். தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தாலிபானின் மற்றொரு கொடூரமான முடிவை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாது என தாலிபான் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்பு பெண்கள் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் சுதந்திரம் இருந்தது. பிபிசி பாரசீகத்தின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களை எந்தப் பள்ளியிலும் மூன்றாம் வகுப்புக்கு மேல் சேர்க்கக் கூடாது என்று தாலிபான் உத்தரவு பிறப்பித்துள்ளது. 683 நாட்களுக்கு முன்பு, அதாவது சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தாலிபான்கள் 11 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கல்வி வழங்க மறுத்துவிட்டனர். புதிய ஆணைக்கு சுமார் 223 நாட்களுக்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பெண்கள் அமர அனுமதிக்கப்படவில்லை.

இதற்கு முன்னர் 6 ஆம் வகுப்புக்கு மேல் தடை இருந்தது

10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத வகையில் குறுகிய கால பயிற்சி வகுப்புகளை நடத்துமாறு ஆப்கானிஸ்தான் அரசின் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். எழுத்தறிவு பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உத்தரவு கிடைத்துள்ளதாக, கல்வித் துறையின் அரசு சாரா உதவி அமைப்புகளில் பணி புரியும், பெயர் குறிப்பிடப்பட விரும்பாத அதிகாரிகள் ஊடக அமைப்புகாளுக்கு இந்த தகவலை அளித்தனர். 

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், "உயரமான மற்றும் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது." என்று கூறினார். சமீபத்திய அடக்குமுறை குறித்து தாலிபான் பொது விவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் அகாஃப், "எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் இப்படி எதுவும் செய்யவில்லை. வேறு யாராவது ஏதாவது செய்திருந்தாலும் அது கல்வி அமைச்சுடன் தொடர்புடையதாக இருக்கும்." என்று கூறினார்.

மேலும் படிக்க | பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறை-சவுதி அரேபிய அரசாங்கம் அதிரடி!

பெண்கள் மீதான கட்டுப்பாடுகள்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள பள்ளிகளில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டது. தாலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கடந்த ஆண்டு சில பகுதிகளில் தங்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறினார். "பெண்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன." என அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், தற்போது ஏற்கனவே இருந்த நிலை இன்னும் மோசமாகி, 6 ஆம் வகுப்பு என்று இருந்த வரம்பு 3 ஆம் வகுப்பாகி விட்டது. 

பெண்களுக்கான பிற தடைகள்

பள்ளிகள் தவிர, பெண்களுக்கான அழகு நிலையங்களுக்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது தவிர, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதையும் தாலிபான்கள் நிறுத்தினர். புர்கா அணியாமல் தங்களுடன் ஒரு ஆண் பாதுகாவலர் இல்லாமலும் பெண்கள் டேக்சியில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | கடல்நீரும் சிறுநீரும் மட்டுமே உணவு... 14 நாட்கள் கப்பலில் பயணித்த 4 நைஜீரியர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News