ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்தியா தனது ராஜீய நடவடிக்கைகள் மூலம் நிலைமையை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் பெற ஆரம்பித்தது. ஆனால் இப்போது இந்த மலிவான எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பண பரிவர்த்தனை முறை குறித்த பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களில் இந்தியாவுக்கு குறைந்த விலையில் எண்ணெய் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம். ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே டாலருக்கு மாற்று வழி கிடைக்கும் வரை சிக்கல்கள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி
மார்ச் 2023 இல், இந்தியா ரஷ்யாவிலிருந்து தினசரி 1.64 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கைக் கொண்டு, தொடர்ந்து ஆறாவது மாதமாக ரஷ்யா தான் இந்தியாவின் முதன்மையான கச்சா எண்ணெய் சப்ளையராக உள்ளது. இதுவரை ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் பேரலுக்கு சராசரியாக 83.96 டாலர் என்ற விலையில் இந்தியா பெறுகிறது. இந்தியா ரஷ்யா இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் பீப்பாய்க்கு 60 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மிகக் குறைந்த விலையில் எண்ணெய் பெற்று வருகிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதும் இந்தியாவுக்கு பெரும் சேமிப்பிற்கு ஒரு காரணம்.
மேலும் படிக்க | NATOவுக்கு எதிராக கை கோர்க்கும் சீனா - ரஷ்யா! அமெரிக்க ஆதிக்கம் முடிவுக்கு வருமா!
ரூபாய்க்கான மாற்று
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்த பிறகு இந்தியாவால் அமெரிக்க டாலரில் செலுத்த முடியாது. சர்வதேச அளவில் பணம் செலுத்தும் பாரம்பரிய முறை டாலர் ஆகும். இது தற்போது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. பல்வேறு விருப்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன, மேலும் இந்திய ரூபாய் என்பது பயன்படுத்தும் கட்டண முறைகளில் ஒன்று. மூன்றாம் நாட்டின் நாணயத்தையும் கட்டணமாகப் பயன்படுத்தலாம் என்ற விருப்பமும் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கரன்சியான திர்ஹாம் இந்தியா மற்றும் ரஷ்யாவால் எண்ணெய்க்கான கட்டணமாக பயன்படுத்தப்பட்டதாக சில செய்திகள் வந்துள்ளன.
மேலும் படிக்க | அதிபர் புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரா முர்சாவிற்கு 25 ஆண்டுகள் சிறை!
திர்ஹாம் பயன்பாடு
திர்ஹம் பயன்பாடு தொடர்பான அறிக்கைகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை மற்றும் அவை அதிகாரப்பூர்வமற்றதாகக் கருதப்படுகின்றன. பிப்ரவரியில் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் திர்ஹாம்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்று கூறியது. இது குறித்து இந்திய அரசிடம் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்தியா-ரஷ்யா உறவுகளைக் கண்காணிக்கும் நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், ரஷ்யாவிற்கு திர்ஹம் தேவையில்லை என்றாலும் இந்தியா பணம் செலுத்த திர்ஹாமைப் பயன்படுத்துகிறது. இது நீண்ட காலம் நீடிக்காது என்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கான விலையை செலுத்த பயன்படுத்துவதற்கான வழிகளை இந்தியாஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சீனா - ரஷ்யா இடையில் வரம்பற்ற ராணுவ கூட்டணி?... மூன்றாம் உலக போர் அச்சத்தில் உலகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ