இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

Srilanka's Next precident : இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்யவுள்ளதாகவும், சபாநாயகர் மகிந்த யாப்பா அடுத்த அதிபராகப் பதவியேற்கத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.    

Written by - Chithira Rekha | Last Updated : Jul 10, 2022, 01:25 PM IST
  • வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்யும் கோத்தர்பய ராஜபக்ச
  • நிதி நெருக்கடியால் தேர்தல் நடத்த இயலாத சூழல்
  • அடுத்த அதிபராகிறாரா சபாநாயகர் மகிந்த யாப்பா ?
இலங்கையின் அடுத்த அதிபர் யார்?  title=

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9-ம் தேதி முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இருந்தும், பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தரப்பில் இலங்கையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் அதிபர் மாளிகையை முற்றுயிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவே, ராணுவ தலைமையகத்திற்கு குடும்பத்துடன் சென்று தஞ்சமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...

இலங்கை வரலாற்றில் அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டு, அதிபர் ஒருவர் வெளிநாடு தப்பியோடியது இதுவே முதல்முறையாகும். இந்த நிலையில், இலங்கை சூழல் குறித்து விவாதிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். இதனையடுத்து, அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்தார். 

அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தால், அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் அரசு அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் நடத்தும் முடிவை கட்சிகள் ஒத்திவைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் தேர்தல் நடத்தினால், அதற்காகவே பெரும் தொகை செலவாகும் என்பதால், தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்படாது என கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்யவுள்ளதாகவும், எனவே சபாநாயகர் மகிந்த யாப்பா அடுத்த அதிபராகப் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பிரதமரும், அதிபரும் நியமிக்கப்படவுள்ளனர். அதுவரை சபாநாயகரே அந்த பொறுப்பில் செயல்பட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News