ஜப்பான் நாட்டில் ஒரே பாலின திருமணங்களை நாடு அங்கீகரிக்கப்படவில்லை என்பதால், அந்த நாட்டில் லெஸ்பியன் ஜோடிகளும், தனியாய் வசிக்கும் பெண்களும் விந்துணு தானம் பெற்று குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் ஒரு சட்டத்தின்படி, அந்நாட்டில் உள்ள லெஸ்பியன்கள் மற்றும் தனியாய் வசிக்கும் பெண்களுக்கு விந்தணு தானம் பெற்று குழந்தை பெறமுடியாது. பொதுவாக ஓரினச்சேர்க்கை தம்பதிகள் மற்றும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தனியாய் வாழும் பெண்கள், விந்தணு தானம் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனர். ஜப்பானில் இந்த செயல்முறை தொடர்பான எந்த சட்டமும் இல்லை.
ஜப்பானில் அமலுக்கு வரவிருக்கும் புதிய சட்டம், யாரெல்லாம் விந்தணு தானம் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை வரையறுக்கிறது. இந்த புதிய சட்டம், குழந்தைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குபடுத்தவும், குழந்தைகளின் உயிரியல் பெற்றோரை அறிந்து கொள்வதற்கான உரிமைகளைப் பாதுகாக்கவும் உருவாக்கப்படுகிறது.
ஒரு நன்கொடையாளரிடமிருந்து விந்தணுக்களை பெறுவதற்கும் இந்த சட்டம் சில கட்டுப்பாடுகளை விதிக்க முயல்கிறது என்று AFP தெரிவிக்கிறது. சட்டப்பூர்வமாக திருமணமான தம்பதிகளுக்கு, பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே விந்தணு தானம் பெற, இந்த சட்டம் அங்கீகாரம் அளிக்கும்.
மேலும் படிக்க | வேலை தேடும் எஞ்சினியர்களுக்கு அருமையான அரசு வேலை! என்டிபிசியில் பணி
ஜப்பானிய மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சங்கம் (JSOG) என்பது விந்தணு தானம் மற்றும் கருவூட்டல் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டுப்படுத்தும் நிறுவனமாகும். திருமணமான தம்பதிகளுக்கு, குழந்தைப் பெற்றுக் கொள்ளும் செயல்முறையை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தின் அடிப்படையாக இந்த அமைப்பு செயல்படுகிறது.
JSOG இன் வழிகாட்டுதல்களை சில மருத்துவர்கள் மீறுகின்றனர். லெஸ்பியன்கள் மற்றும் ஒற்றைப் பெண்களுக்கு குழந்தைப் பேறு வழங்குவதற்காக மருத்துவர்களில் சிலர் வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்துவதால், சட்டம் உருவாக்கப்படுகிறது. அவற்றை மீறுகின்றனர்.
விந்தணு தானம் மூலம் ஏற்கனவே குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு தற்போது புதிய சங்கடம் ஏற்பட்டுள்ளது. தங்கள் குழந்தை இவ்வாறு பிறந்ததால் களங்கம் ஏற்படக்கூடும் என்று அஞ்சுகின்றனர். சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு பிறந்த அனைத்து குழந்தைகளும் சமூகத்தால் இழிவாக பார்க்கப்படும் சூழலை உருவாக்க முடியும்.
மேலும் படிக்க | அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தேடுதல் பணிகள் மும்முரம்
சட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ஆளும்-கூட்டணி சட்டமியற்றுபவர் கோசோ அகினோ, குழந்தைகளின் உரிமைகள் "சட்டப்பூர்வமாக திருமணமான பெற்றோர் கூட்டுக் காவலில்" இயல்பாகவும், மிக எளிதாகவும் பாதுகாக்கப்படுகின்றன என்று சொல்கிறார்.
"இனப்பெருக்க தொழில்நுட்பத்தை பின்பற்றுவதால் குழந்தைகளின் நல்வாழ்வின் இழப்பு ஏற்படுகிறது. இதை ஊக்குவிக்கக்கூடாது," என்று அவர் AFP இடம் கூறினார். சில மருத்துவர்கள் இந்த புதிய சட்டத்தை ஆதரிக்கிறார்கள், இந்த சிகிச்சையானது பாலின திருமணமான தம்பதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறுகிறார்கள்.
"புதிய சட்டத்தின் மூலம், சிகிச்சையானது மிகவும் சட்டபூர்வமானதாகக் கருதப்படும் மற்றும் இது நாட்டின் முக்கியமான விஷயமாக மாறும்” என்று டோக்கியோவின் கீயோ பல்கலைக்கழக மருத்துவமனையின் மகப்பேறியல் பேராசிரியரான மமோரு தனகா நம்புகிறார்.
மேலும் படிக்க | குழந்தை திருமணத்திற்கு ஆதரவு... தீட்சிதர்கள் அதிரடி கைது
மேலும் படிக்க | ’செத்த பயலே’ பிக்பாஸ் வீட்டில் அலப்பறையை ஆரம்பித்த ஜிபி முத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ