ரஷ்யாவில், அதிபர் புட்டினை தீவிரமாக எதிர்த்து, போராட்டம் நடத்தி வந்த போராளியான, அலெக்ஸி நாவல்னி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறையில் இறந்ததாக, அந்நாட்டு சிறை துறை அறிவித்தது. புதினை எதிர்த்து வந்ததன் காரணமாக, 47 வயதான அலெக்ஸி நவல்னி, பல்வேறு வழக்குகளை சந்தித்து வந்தார். அதில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உடல்நிலை மோசம் அடைந்ததன் காரணமாக இறந்தார்.
ரஷ்யாவின் மிக ஆபத்தான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த தண்டனை காலனி
அலெக்சி நவல்னியை, கொலை செய்ய பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு உணவில் விஷம் கொடுக்கப்பட்டு அதன் மூலம் அவர் உடல்நிலை முன்னதாக மோசம் அடைந்தது. இந்நிலையில் அவர் அடைக்கப்பட்டு இருந்த சிறை குறித்து மனதிற்கு திகில் ஊட்டும் வகையிலான பல தகவல்கள் வெளி வருகின்றன. அவர், ரஷ்யாவின் மிக ஆபத்தான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த தண்டனை காலனிக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் அவர் பல வகையில் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் யூகங்கள் நிலவுகின்றன. அலக்ஸி நவநியை தொடர்பு கொள்ள அவரது ஆதரவாளர்கள் முயன்ற போது அவர் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலே, ஆதரவாளர்களால் அவரை சந்திக்க முடியவில்லை.
ரஷ்யாவில் உள்ள தண்டனை காலனி என்று அழைக்கப்படும் திகிலூட்டும் சிறைகள்
தண்டனை காலனி என்று உருவாக்கப்பட்டு, அதில் குற்றவாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும், பல வகைகளில் சித்திரவதை கொடுக்கப்பட்டு வந்தது இப்போது தகவல்கள் கசிந்துள்ளது. மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ள சீர்திருத்த பள்ளி என்று அரசு குறிப்பிட்டாலும், இங்கே போதுமான வசதி பாதுகாப்பு எதுவும் இல்லாத இடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடும் குளிர் நிலவும் அந்த பகுதியில், குளிர் காலத்திற்கான ஆடையோ உடையோ இல்லாமல் அவர்கள் குளிரில் தவிர்த்து வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. சுமார் எல்லோருக்கும் மேற்பட்ட தண்டனை காலணிகள் உள்ளதாகவும், அவை பனி மலைகளை ஒட்டி அமைந்துள்ளன என்றும், சிறைச்சாலைக்கு செல்ல வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. சில சிறைச்சாலைகளை அடைய ஒரு மாதம் கூட ஆகலாம் என கூறப்படுகிறது.
கடும் குளிரில் வெறும் காலுடன் நடக்க நிர்பந்திக்கப்படும் கைதிகள்
கடுமையான பனிப்பொழிவு நிகழும் அந்தப் பகுதிகளில், மிகக் கடுமையான குளிர் நிலவும் போது கூட, கைதிகள் வெறும் காலுடன் நடக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு உக்கார கூட அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. தினமும் 16 மணிநேர சித்திரவதை செய்யப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | ராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா பாகிஸ்தான்... நீடிக்கும் குழப்பம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ