சவூதியில் முதல் முறையாக பெண் துணை அமைச்சர் நியமனம்!

சவூதியில் முதல் முறையாக பெண் ஒருவர் தொழிலாளர் நலத்துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். 

Last Updated : Mar 1, 2018, 11:26 AM IST
சவூதியில் முதல் முறையாக பெண் துணை அமைச்சர் நியமனம்! title=

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பட்டத்து இளவரசாகப் பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான் அங்கு சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

சவுதியில் சினிமா தியேட்டர் திறக்கவும் பெண்கள் கார் ஓட்டவும் விளையாட்டுகளை மைதானத்துக்குச் சென்று பார்க்கவும் அனுமதியளித்துள்ளார். அதையடுத்து, 2015-ம் ஆண்டு தான் அங்கு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து முகமது பின் சல்மான் சவூதியின் மன்னராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு, அவர்கள் தனியாக தொழில் தொடங்க, குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் உயர்கல்வி பயில என அவர்களுக்கான பல உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர் அமைச்சரவையில் முதல் முறையாக பெண் ஒருவரை நியமித்துள்ளார். 

தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று பெண் ஒருவர் சவூதியின் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது முதல்முறையாகும். 

Trending News