காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; மூன்றாம் நாடு தலையிடக்கூடாது: ரஷ்யா

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்கிய விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை ஆகும். அதில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என ரஷ்யா கூறியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 28, 2019, 01:51 PM IST
காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; மூன்றாம் நாடு தலையிடக்கூடாது: ரஷ்யா title=

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்கிய தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் விசியத்தில் நாங்கள் இந்தியாவுடன் இருக்கிறோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதுதொடர்பாக, ரஷ்ய தூதர் நிகோலே குடோஷேவ், 370 வது பிரிவை நீக்குவது இந்திய அரசின் இறையாண்மை முடிவு ஆகும் என்று கூறினார். இது இந்தியாவின் உள் பிரச்சினை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் கதவைத் தட்டினார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சென்றார்கள். அவரும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அதாவது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகள் அனைத்தும் இருதரப்பு பிரச்சனை. இதை இருநாடுகள் மட்டுமே பேச்சு வாரத்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெளிவாகக் கூறினார். 

மேலும் டிரம்ப் "பிரதமர் மோடி மற்றும் பிரதமர் இம்ரான் கான் இருவருடனும் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர்களால் அதைத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அதை தீர்க்க நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர். இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பிரச்சனயை தீர்க்க முடியும் என்று டிரம்ப் கூறினார்.

Trending News