மியான்மாரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் மக்கள் போராட்டம், மிகவும் வலுவடைந்து வருகிறது. ராணுவம் தனது சாம் பேத, தான, தண்ட முறைகளை பயன்படுத்தி அதனை ஒடுக்க நினைக்கிறது. கிட்டதட்ட 50 ஆண்டுகள் ராணுவ ஆட்சியை கண்ட மியான்மாரில், 2012 ஆம் ஆண்டு வலுவிழக்க தொடங்கியது. 2015 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆன் சாங் சூகி, மூலம் ஓரளவு ஜனநாயகம் மீட்கப்பட்டது. எணினும், ராணுவம், இயற்றிய அரசியல் சாஸனத்தை பின்பற்றியே ஆட்சி நடைபெற்றது
இந்நிலையில், மியான்மரில் (Myanmar) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.
ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
எனினும் மியான்மரின் (Myanmar) ராணுவத்திற்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi), அதிபர் வின் மைன்ட் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக #HearTheVoiceofMyanmar, #RespectOurVotes, மற்றும் #SaveMyanmar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் (Twitter) ட்ரெண்டானது.
மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியுள்ளது.
இந்நிலையில், மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டகாரர்களை ஒடுக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது ராணுவம்.
சமூக ஊடகங்களை மியான்மார் ராணுவம் முடக்கியுள்ள போதிலும், மக்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
ALSO READ | மியான்மரில் பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமையும் முடக்கியது ராணுவம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR