ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்

தீ விபத்து மோசமடைந்து வருவதால் இதுவரை நாடு முழுவதும் 23 பேர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2020, 04:08 PM IST
ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் title=

புது டெல்லி: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ தொடர்ச்சியாக பரவி வருவதால், ஆஸ்திரேலிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். தீப்பிழம்புகளால் வானம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு உள்ளது. கங்காரு தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் ப,பலியானதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 23 ஐ எட்டியுள்ளது. இது மேலும் பலி எண்ணிக்கை நிலைமை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தென் கடற்கரை மற்றும் விக்டோரியாவில் உள்ள கிழக்கு கிப்ஸ்லேண்டில் உள்ள பகுதிகளைச் சுற்றிலும் தொடர்ச்சியான தீ விபத்தால் வானம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தபட்டு உள்ளது.

சனிக்கிழமையன்று ஆஸ்திரேலியா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீ வேகமாக பரவி வருகிறது.

நாட்டின் தலைநகரம், கான்பெர்ரா போன்ற பகுதிகளில் 80 ஆண்டுகளின் வெப்ப சாதனையை முறியடித்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 44 டிகிரி செல்சியஸ் (111 டிகிரி பாரன்ஹீட்) ஐ எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில், வெப்பநிலை 48.9 டிகிரி செல்சியஸ் (120 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது.

தீ விபத்து நிலைமைகள் மோசமடைந்து வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரதமர் ஸ்காட் மோரிசன் சனிக்கிழமையன்று நாடு முழுவதும் 23 பேர் பலியாகி உள்ளதாக கூறினார். இது வாரத்தின் தொடக்கத்தில் 18 ஆக இருந்தது. தீ விபத்தால் 1,500 க்கும் மேற்பட்ட வீடுகளும் அழிந்துள்ளன.

விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஓமியோ பிராந்தியத்தில் ஒரே இரவில் தீ விபத்து 6,000 ஹெக்டேர் (23 சதுர மைல்) அளவுக்கு தீப்பிடித்ததாக கிப்ஸ்லேண்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் சிட்னியின் தெற்கே வொல்லொண்டில்லி பகுதியில் ஏற்பட்ட தீ "கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது" என்று கிராமப்புற தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இது 264,000 ஹெக்டேர் (1,020 சதுர மைல்) நிலத்தை எரித்துவிட்டது எனவும் கூறப்பட்டு உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News