எட்டுக்கள் பூச்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு காவல்துறையினர் கொடுத்த தண்டனை....
நம்மில் பலருக்கு கரப்பான் பூச்சி, எட்டுக்கால் பூச்சி என சில உயிரினங்களை கண்டால் பொது ஆத்தாடி, அம்மாடி என கத்தி கூச்சல் போடுவது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலியாவில் விசித்திரமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி காவல்துறையினருக்கு விசித்திரமான ஒரு புகார் வந்துள்ளது. ஒரு வீட்டில் இருந்து சிறு குழந்தை அழும் குரலும் ஒருத்தர் ‘நீ ஏன் இறந்து விடக் கூடாது?' என்று மிரட்டும் குரலும் கேட்டதால், அந்த வழியாக சென்ற ஒருவர் இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
குழந்தையை தான் மிரட்டுகிறார் என எண்ணி பெர்த்தில் உள்ள அந்த வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த வாலிபர், மிரட்டிக்கொண்டிருந்தது குழந்தையை அல்ல. அங்கு இருந்த எட்டுகால் பூச்சியை என்று.
Wanneroo Police are reporting that multiple police responded to a job this morning; turned out it was just someone trying to kill a spider .. #police #wanneroo pic.twitter.com/7VX1pq9O31
— Policing News AU (@PoliceAU) January 2, 2019
வனேரோ போலீஸார், ட்விட்டரில், ‘நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை - அந்த எட்டுகால் பூச்சியை தவிர' என ட்விட் செய்து பின் அதை அழித்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Just another normal day in Australia with our unpleasantly large spiders!
Thankfully the @WannerooPolice responded to the incident pic.twitter.com/VRxosRLQ7c— Lyam Jay (@Lyam_31) January 2, 2019
"Excuse me I need help, theres an intruder in my house. He has 8 legs and and is very fast. Send help"
— (@BeeSeaCC) January 2, 2019
Did you bring 4 sets of handcuffs?
— Matt Ash (@MattisWriting) January 2, 2019
எட்டுகால் பூச்சியை கண்டு பயமுடைய அந்த இளைஞர், பயத்தால் தான் அப்படி சத்தம் போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் இதற்கு காவல்துறையினரிடம் மன்னிப்பும் கேட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. வனேரோ போலீஸார் ட்விட் அழிக்கப்பட்டதிற்கான காரணம் என்னவென்று கேட்டதற்கு, 'அதில் சில டைப்பிங் தவறுகள் இருந்தது. அதனால் தான் அந்த ட்விட் அழிக்கப்பட்டது' எனப் பதில் அளித்தனர்.
இது போன்று சென்ற ஆண்டு, மிக பெரிய எட்டுகால் பூச்சி ஒன்று ஆஸ்திரேலியாவில் ஒரு காரில் இருப்பது போன்ற வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.