Paperless: காகித பயன்பாட்டை ஒழிந்த துபாய்! USD 350 மில்லியன் சேமித்து சாதனை

100% காகிதம் இல்லாத உலகின் முதல் நகரம் துபாய், 350 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சேமித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 11:48 AM IST
  • காகிதமில்லா நகரம் துபாய்
  • USD 350 மில்லியன் சேமித்து சாதனை
  • DubaiNow செயலி மூலம் சாதனை தொடரும்
Paperless: காகித பயன்பாட்டை ஒழிந்த துபாய்!  USD 350 மில்லியன் சேமித்து சாதனை title=

துபாய்: 100 சதவீதம் காகிதம் இல்லாத உலகின் முதல் அரசாக மாறியுள்ளது துபாய் . சவுதியின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த தகவலை அறிவித்துள்ளார். 1.3 பில்லியன் திர்ஹாம் (USD 350 மில்லியன்)  தொகையும்,  14-மில்லியன் மணிநேரம் மனித உழைப்பும் சேமிக்கப்பட்டுள்ளதாக பட்டத்து இளவரசர் என்று அறிவித்துள்ளார். .

துபாய் அரசாங்கத்தின் அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் நடைமுறைகள், 100 சதவீதம் டிஜிட்டல் மற்றும் விரிவான டிஜிட்டல் அரசாங்க சேவைகள் தளத்திலிருந்து நிர்வகிக்கப்படுகின்றன. இது, வாழ்க்கையை அனைத்து அம்சங்களிலும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான துபாயின் பயணத்தில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் பயணம் இது என்று ஷேக் ஹம்தான் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

இந்த சாதனையானது, துபாயின் உலகின் முன்னணி டிஜிட்டல் (Digital implementation) மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும் அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் ஒரு முன்மாதிரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது என்று பட்டத்து இளவரசர் தெரிவித்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் கனடா ஆகியவை அரசாங்க நடைமுறைகள் மற்றும் குடிமக்களின் அடையாளங்களை உள்ளடக்கிய அரசாங்க செயல்பாட்டை பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், செப்டிக்ஸ் சைபர் தாக்குதல்களுக்கு ( cyber attacks) ஆளாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

READ ALSO | நடுவானில் பயங்கரம்! விமானத்தின் மீது மோதிய பறவைக் கூட்டம்

அடுத்த ஐந்து தசாப்தங்களில் துபாயில், டிஜிட்டல் வாழ்க்கையை உருவாக்கவும் மேம்படுத்தவும் மேம்பட்ட உத்திகளை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் கூறினார்.

துபாயின் டிஜிட்டல் பயணத்தின் புதிய கட்டம், செழிப்பான ஸ்மார்ட் சிட்டியில் வசிப்பவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய எதிர்கால அரசாங்கங்களை செயல்படுத்துகிறது. அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் அவர்களுக்கு செழிப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சிக்கான புதுப்பிக்கப்பட்ட வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் கூறினார்.

துபாய் பேப்பர்லெஸ் உத்தியானது தொடர்ச்சியாக ஐந்து கட்டங்களில் செயல்படுத்தப்பட்டது, அவை ஒவ்வொன்றையும் துபாய் அரசாங்கத்தின் வெவ்வேறு குழுக்கள் செயல்படுத்தின.  

ஐந்தாவது கட்டத்தின் முடிவில்,  அனைத்து 45 அரசு நிறுவனங்களிலும் டிஜிட்டல் செயல்பாடு  முழுமையாக அமல்படுத்தப்பட்டன. இந்த நிறுவனங்கள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன.

இதனால், 336 மில்லியனுக்கும் அதிகமான காகித நுகர்வுகள் குறைந்துள்ளது. 12 முக்கிய வகைகளில், 130க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் சிட்டி சேவைகளை அணுக அனுமதிக்கும் துபாய்நவ் அப்ளிகேஷன் (DubaiNow application) மூலம் குடியிருப்பாளர்களுக்கு விதிவிலக்கான அனுபவங்களை துபாய் அரசு முடிவு செய்துள்ளது.

Also Read | சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலா? ரெசெப் தையிப் எர்டோகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News