இந்தியா உடனான வர்த்தகத்தை விரும்பும் பாகிஸ்தான் வர்த்தகர்கள்.. வெளியுறவு அமைச்சர் தகவல்!

India Pakistan Trade Relations: நீண்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுடன் 'நல்ல உறவை' பராமரிக்க விரும்புகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2024, 02:08 PM IST
  • பாகிஸ்தானின் வர்த்தக சமூகம் இந்தியாவுடன் வர்த்தகத்தைத் தொடங்க விரும்புவதாக தகவல்.
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள்.
  • பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற்ற தேர்தல்.
இந்தியா உடனான வர்த்தகத்தை விரும்பும் பாகிஸ்தான் வர்த்தகர்கள்.. வெளியுறவு அமைச்சர் தகவல்! title=

India Pakistan Trade Relations: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டது. நீண்ட காலமாக நல்லுறவு இல்லை. நீண்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுடன் 'நல்ல உறவை' பராமரிக்க விரும்புகிறது. பாகிஸ்தானின் வர்த்தக சமூகம் இந்தியாவுடன் வர்த்தகத்தைத் தொடங்க விரும்புவதாக, பாகிஸ்தான் அரசின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறினார். தனது அண்டை நாடுகளை மாற்ற முடியாது என்று கூறிய, அவர் இதனை தெரிவித்தார்.

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பாக். வெளியுறவு அமைச்சர்

இஷாக் தார் லண்டனில் செய்தியாளர் சந்திப்ப்பின் போது, ​​ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'என்ன நடந்தாலும் கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது தவறு தான்' என்று கூறினார். அதனை தொடர்ந்து வர்த்தக உறவு பற்றி குறிப்பிட்ட இஷாக் டார், " இந்தியா, 2019 ஆகஸ்ட் மாதத்தில் எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் வருந்துகிறோம். ஆனால் பாகிஸ்தானின் வர்த்தக சமூகம் இந்தியாவுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்க விரும்புகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அனைத்து விதமான ஆலோசனைகள், கருத்துக்கள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்த பிறகு முடிவு எடுக்கப்படும்" என்றார்.

வர்த்தக உறவுகள் குறித்து உடனடியாக 'ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க முடியாது'

பட்ஜெட்டுக்கு முன்பே இந்தியா உடனன வர்த்தகம் குறித்து விவாதம் எழுப்பப்பட்டு வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். சிங்கப்பூர் வழியாக வர்த்தகம் செய்வது கடினம். போக்குவரத்து செலவு மிகவும் அதிகமாகும். எனவே இந்தியா உடனான வர்த்தகம் தொடர்பான சாத்தியக் கூறூ குறித்து கூட்டம் நடத்தப்பட்டு பொருளாதாரத்தை உயர்த்த வர்த்தகத்தில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யப்படும். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஆலோசனை தேவை என்பதால், இந்தியா உடனான வர்த்தக உறவுகள் குறித்து ஆம் அல்லது இல்லை என்று என்னால் இப்போது பதிலளிக்க முடியாது.

மேலும் படிக்க | கடற்கரை மணலை எடுத்தால் ₹2 லட்சம் அபராதம்... எச்சரிக்கும் கேனரி தீவுகள் நிர்வாகம்!

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற்ற தேர்தல்

பாகிஸ்தானில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி பொது தேர்தல் நடைபெற்றது. ஆச்சர்யமளிக்கும் விதமாக, இம்ரான் கான் மீதும், அவரது கட்சியினர் மீதும் கடும் அடக்குமுறையை ராணுவம் மேற்கொண்ட போதும், இம்ரான் கட்சியின் ஆதரவாலர்கள், சுயேச்சையாக போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தனர். எனினும், தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன் பின்னர், அனைத்து போராட்டங்களுக்கும் பிறகு ஷாபாஸ் ஷெரீப் பிரதமரானார். அவரும் தனது உரையில் அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்துவது குறித்து பேசியிருந்தார். எனினும், இந்தியாவுடனான உறவுகளைக் குறிப்பிட்டு பேசுகையில், 2019ம் ஆண்டு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதை எதிர்த்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள்

2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனினும் புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரஷ்யாவில் ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதல்... பிரதமர் மோடி கடும் கண்டனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News