North Korea: அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார்- சபதம் போடும் கிம்

ஜோ பிடன் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு மட்டுமல்ல, மோதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தனது அரசாங்கத்திற்கு கிம் உத்தரவிட்டிருக்கிறார்  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2021, 10:30 AM IST
  • அமெரிக்காவுடன் மோதலுக்கும் தயார், பேச்சுவார்த்தைக்கும் தயார் என்கிறார் கிம் ஜாங் உன்
  • அணுசக்தி திட்டத்தை கைவிட்டு விட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வலியுறுத்தியதை அடுத்து கிம் சவால்
  • அமெரிக்காவின் கொள்கையை பின்பற்ற தரப்படும் அழுத்தத்திற்கு பதிலடி
North Korea: அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார்- சபதம் போடும் கிம் title=

சியோல்: அமெரிக்காவுடன் மோதலுக்கு தயாராக இருப்பதாக வட கொரியாவின் கிம் சவால் விடுகிறார். அமெரிக்காவின் ஜோ பிடன் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொல்கிறார் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன். பேச்சுவார்த்தைக்கு மட்டுமல்ல, மோதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தனது அரசாங்கத்திற்கு கிம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வட கொரியா, அணுசக்தி திட்டத்தை (nuclear programme) கைவிட்டு விட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அமெரிக்க ஊடகங்களும் மற்றவர்களும் வலியுறுத்திய சில நாட்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 18, 2021) வட கொரியாவின் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தன் நாட்டின் அணு ஆயுதங்களை பலப்படுத்தவும், தனது கொள்கையை பின்பற்றுமாறு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுப்பதற்கு தான் தயார் என்று கிம் சவால் விடுவதாகவே இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம், அவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பார் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

Also Read | வட கொரியாவின் Kim Jong Un-க்கு blue jeans மீதுள்ள வெறுப்பின் காரணம் என்ன தெரியுமா?

வியாழக்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமையாக அரசின் கொள்கை போக்குகளை கிம் ஜாங் உன் விரிவாக ஆராய்ந்தார். அதோடு, வாஷிங்டனுடனான (Washington) உறவில் எடுக்கப்பட வேண்டிய குறிப்பிடப்படாத நடவடிக்கைகளை தெளிவுபடுத்தினார் என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் (Korean Central News Agency) தெரிவித்துள்ளது.

அப்போது, பேச்சுவார்த்தை மற்றும் மோதல் ஆகிய இரண்டிற்கும் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை கிம் வலியுறுத்தினார். நமது நாட்டின் மதிப்பையும், சுயாதீன வளர்ச்சிக்கான அதன் நலன்களையும் பாதுகாப்பதற்காகவும், அமைதியான சூழலுக்காவும், நாட்டின் பாதுகாப்பிற்கும் நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம் அளிப்பதற்காகவும் மோதலுக்கு முழுமையாகத் தயாராக வேண்டும் என்று கிம் கூறியதாக தெரிகிறது.

2018-19 ஆம் ஆண்டில், கிம் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் (Donald Trump) தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். கிம் தனது அணுசக்தி திறனை ஓரளவு மட்டுப்படுத்துவதற்கு ஈடாக, வடகொரியாவுக்கு எதிரான விரிவான பொருளாதாரத் தடையை அகற்ற வேண்டும் என்று அவர் கோரியதை டிரம்ப் நிராகரித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

Also Read | வட கொரியாவின் விந்தை அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் காணவில்லை... !!!

வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தில் ஒரு புதிய அணுகுமுறையை வகுக்க பிடனின் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அளவுக்கோடு திருத்தப்பட்ட, நடைமுறைக்கு சாத்தியமாகக்கூடியது (calibrated and practical) என்று கூறப்படும் அவரது வட கொரியா கொள்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால், கிம்மின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த, அவருடன் டிரம்ப்பின் நேரடி சந்திப்புகளுக்கும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் “மூலோபாய பொறுமைக்கும்” (strategic patience) இடையில் ஜோ பைடன் ஒரு நடுத்தர நிலையை எடுப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
  .
இந்த வார தொடக்கத்தில், வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்கள் மற்றும் கொரிய தீபகற்பத்தில் (Korean Peninsula) அணுசக்தியை முழுமையாக கைவிட வேண்டும் என்று  கோரி, ஏழு பணக்கார நாடுகளின் குழுவின் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

Also Read | மர்மமான வடகொரிய அதிபரை போல், மர்மம் நிறைந்த வட கொரியா ஹோட்டல்..!!!

பேச்சுவார்த்தைகளை ஈடுபடவும் மீண்டும் தொடங்கவும் மனித உரிமை நிலைமைகளை மதிக்கவும் அவர்கள் வட கொரியாவிற்கு அழைப்பு விடுத்தனர். வட கொரியா மீதான தனது காழ்ப்புணர்ச்சிக் கொள்கையை வாஷிங்டன் கைவிட மறுத்தால், கிம் தனது அணு ஆயுதங்களை விரிவுபடுத்தி, அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை (U.S. Mainland) குறிவைத்து உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்குவதாக அண்மையில் அச்சுறுத்தியுள்ளார்.

மார்ச் மாதத்தில், வடகொரிய ராணுவம் தனது முதல் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை (short-range ballistic missile) மேற்கொண்டது. ஆனால் வட கொரியா இன்னும் நீண்ட தூர ஏவுகணை மற்றும் அணுசக்தி சோதனைகள் (moratorium on long-range missile and nuclear tests) தொடர்பான தடையை மதித்து கடைபிடித்து வருகிறது, இது கிம் இன்னும் இராஜதந்திரத்திற்கான வாய்ப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறார் என்பதற்கான அறிகுறியாகும்.

Also Read | ‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News