40 வயதிலும் உங்கள் எலும்புகள் வலுவாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

இளம் வயதில் இருப்பது போலவே 40 வயதிற்கு மேலும் உங்கள் எலும்புகள் வலுவாக இருக்க பால் பொருட்களை தினசரி உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

1 /6

எலும்புகள் தான் உடலில் வலிமையை உறுதி செய்கின்றன. அவை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். நாம் சாப்பிடும் உணவுகளை பொறுத்து எலும்புகள் ஆரோக்கியமாகிறது.

2 /6

எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் எலும்புகள் 40 வயதிற்கு மேலும் இரும்பு போல் வலுவாக இருக்கும்.

3 /6

வயதான காலத்திலும் எலும்புகள் வலுவாக இருக்க பால் சார்ந்த பொருட்களை அதிகம் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும். அவற்றில் கால்சியம் நிறைந்து இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

4 /6

கால்சியம் தவிர பாலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இதுதவிர பல்வேறு ஊட்டச்சத்துக்களும் பாலில் உள்ளது. தயிர், நெய், சீஸ் போன்ற பால் சார்ந்த உணவுகளை தினசரி எடுத்து கொள்ளலாம்.

5 /6

முட்டைக்கோஸ் போன்ற இலை காய்கறிகளை உணவுகளில் எடுத்து கொள்ள வேண்டும். இவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. எலும்பு வலுவாக இருக்க இவை உதவுகிறது.  

6 /6

உறுதியான எலும்புகளை பெற பாதாம் பருப்புகளை சாப்பிடலாம். அவற்றில் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.