தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!

நம்மில் பலருக்கு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கும். இவர்களுக்கு எதிர்காலத்தில் காத்திருக்கும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா? இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..  

Written by - Yuvashree | Last Updated : Jul 3, 2024, 05:04 PM IST
  • தினசரி ஹேர் வாஷ்
  • பிரச்சனைகள் என்ன?
  • அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!
தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்! title=

தினமும் இருந்து காலையில் குளிப்பது என்பது மனிதர்களின் நாகரீகமான மற்றும் சுகாதாரமான பழக்கங்கள் ஒன்றாகும். அதிலும் சிலர் குளித்துவிட்டு தான் காலையில் சாப்பிடவே செய்வார். இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, தினம்தோறும் தலைக்கு குளிப்பர். ஒரு நாள் ஆரம்பிக்கும் இந்த பழக்கம் தொடர்ந்து பல நாட்கள் நடைபெறுவதால் உடலில் என்னென்ன உபாதைகள் ஏற்படும் தெரியுமா? 

தலைக்கு குளிப்பது:

தலையில் இருக்கும் பொடுகை நீக்க, அழுக்கை போக்க, பேன்களை நீக்க என பல்வேறு காரணங்களுக்காக பலர் தலைக்கு குளிப்பர். உடலில் வழியும் வியர்வையையும் அதன் மூலம் வெளியேறும் பாக்டீரியாக்களையும் தடுப்பதற்கு குளிப்பது போல, தலையிலிருந்து பரவும் நோய் கிருமிகள் மற்றும் வியர்வையை தடுக்கவும் பலர் தலைக்கு குளிப்பர். ஆனால், இதை தினமும் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். 

தினமும் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

நம் முடியின் தன்மை மற்றும் உச்சந்தலையின் தன்மையை பொறுத்து நாம் தினமும் தலைக்கு குளிக்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு தினமும் தலைக்கு குளிப்பதால் முடி இழப்பு அபாயம் அதிகரிக்கலாம். கேசம் உறுதியிழந்து, வறண்டு காணப்படலாம். ஒரு சிலருக்கு தலை அரிப்பு ஏற்பட்டு, பல சமயங்களில் முடி எண்ணெய் பசையுடன் இருப்பது போலவும், முடி வலுவே இல்லாமல் இருப்பது போலவும் காட்சிப்படுத்தும்.

ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனையை கொண்டவர்கள் தலைக்கு குளிக்கும் நாட்களில் தும்மல், இருமல் மற்றும் தலைவலியால் மிகவும் அவதிப்படுவர். ஒரு சிலருக்கு சீதளம், தலையில் நீர்க்கோர்த்துக்கொள்வது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதனால், இது போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | Hair Care : முடி வளர்ச்சிக்கு இந்த 3 பொருட்கள் இருந்தா போதும்

முடி பராமறிப்பு:

சமீப காலமாக பலர் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்படுவது முடி இழப்பு. இதை தவிர்க்க சில முடி பராமறிப்பு பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 

>ஷாம்பூவை தேர்ந்தெடுத்தல்: நமது முடி மற்றும் உச்சந்தலைக்கு ஏற்ற ஷாம்பூக்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும். 

>வறண்ட முடி கொண்டவர்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளித்தால் பயன் பெறுவர் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

>அடிக்கடி தலை முடியை அவிழ்த்து விடுவது நல்ல ஹேர் ஸ்டைல்தான் என்றாலும், இதனால் முடி வெடிப்புகள் அதிகமாக ஏற்பட்டு, முடி இழக்க நேரலாம். எனவே, வீட்டில் இருக்கும் போது அல்லது முடிந்த அளவு முடியை பின்னல் போட்டுக்கொள்வது நல்லதாகும்.

>தலைக்கு எண்ணெய் வைப்பது நல்லதுதான். ஆனால் அதிக எண்ணெய் அல்லது தவறான எண்ணெய் தலையில் பொடுகு உற்பத்தியை அதிகரிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, தலைக்கு குளிப்பதற்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்னர் எண்ணெய் வைத்துவிட்டு பின்னர் ஷாம்பூ போட்டு குளித்து விடலாம்.

>முடிக்கு ஊட்டச்சத்து தரும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம் ஆகும். சால்மன் மீன்கள், வால்நட்ஸ், ப்ராக்கலி, காலிஃப்ளவர், ஃப்ளேக்ஸ் விதைகள் உள்ளிட்டவை முடி வளர உதவும் உணவுகளாகும். 

>மன அழுத்தம், தேவையற்ற குழப்பம், பதற்றம் உள்ளிட்டவையும் முடி அதிகமாக கொட்டுவதற்கு காரணமாக அமையும். எனவே, யோகாசனம், மன நல ஆலோசகரிடம் செல்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மன நலனை மேம்படுத்திக்கொண்டால் முடி இழப்பு அபாயத்தையும் தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முடி வளர்ச்சி அடர்த்தியாக வேண்டுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News