EPFO Wage Ceiling: இபிஎஃப்ஓ -வுக்கான சம்பள வரம்பை உயர்த்தும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்படாமல் உள்ளது.
EPFO Wage Ceiling: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த முன்மொழிவை மறுபரிசீலனை செய்து நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) வரம்பை அதிகரிக்கும். இபிஎஃப்ஓவுக்கான ஊதிய வரம்பு ரூ.15,000 லிருந்து ரூ.21,000 அல்லது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், அடிப்படைச் சம்பளம் ரூ.15,000க்கு மேல் உள்ள ஊழியர்களும் இபிஎஸ் திட்டத்தில் சேர முடியும். இதனால் அத்தகைய ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற முடியும்.
இந்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் சமூகப் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு பெரும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கான (EPFO) சம்பளத்தின் அதிகபட்ச வரம்பை அரசு பட்ஜெட்டில் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. அரசாங்கம், சமூக பாதுகாப்பு கவரேஜை அதிகரிக்க, EPFO இன் ஊதிய வரம்பை தற்போதைய ரூ.15,000-லிருந்து ரூ.21,000-ரூ.25,000 ஆக அதிகரிக்கலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இபிஎஃப்ஓ -வுக்கான சம்பள வரம்பை உயர்த்தும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்படாமல் உள்ளது. இப்போது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த முன்மொழிவை மறுபரிசீலனை செய்து நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) வரம்பை அதிகரிக்கும்.
சம்பள வரம்பை அதிகரிப்பது அரசு மற்றும் தனியார் துறையின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது EPF மற்றும் EPS க்கு முதலாளியின் பங்களிப்பை கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம், பணியாளர்கள் ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியத்தைப் பெறுவார்கள், ஆனால் அவர்களது இன் ஹேண்ட் சம்பளம் அதாவது அவர்கள் கையில் மாதா மாதம் கிடைக்கும் சம்பளம் குறையும்.
முதலாளியின் மொத்த பங்களிப்பில் 69.4% EPS க்கு செல்கிறது (மொத்த அடிப்படை சம்பளத்தில் 8.33%). மொத்த அடிப்படை சம்பளத்தில் 30.5% அதாவது 3.67% EPF கணக்கிற்கு செல்கிறது. தற்போது, EPFO இன் அடிப்படை சம்பள வரம்பு 15,000 ரூபாயாக இருப்பதால், ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) அதிகபட்ச பங்களிப்பு 1250 ரூபாயாக உள்ளது. இந்த சம்பள வரம்பு 21,000 ரூபாயாக உயர்ந்தால் அதிகபட்ச பங்களிப்பு 1749 ரூபாயாக அதிகரிக்கும். இதன் மூலம், ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியம் கிடைக்கும். PF கணக்கிற்கு செல்லும் பங்களிப்பும் அதிகரிக்கும். ஆனால் மாதா மாதம் கையில் கிடைக்கும் சம்பளம் குறையும்.
EPF விதிகளின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் தற்போது 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர்கள் EPF திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும், EPS இல் சேர முடியாது. ஆனால் இபிஎஃப்ஓவுக்கான ஊதிய வரம்பு ரூ.15,000 லிருந்து ரூ.21,000 அல்லது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், அடிப்படைச் சம்பளம் ரூ.15,000க்கு மேல் உள்ள ஊழியர்களும் இபிஎஸ் திட்டத்தில் சேர முடியும். இதனால் அத்தகைய ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற முடியும்.
அதிக தொழிலாளர்களை சமூக பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வர அரசு விரும்பினால், இந்த திசையில் செல்வது சரியாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை இருப்பதால், ஊதிய வரம்பு உயர்த்தப்பட்டால் அது லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சம்பள வரம்பு 15,000 ஆக இருப்பதால், இந்த வரம்பிற்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்பீடு போன்ற சமூக பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
EPFO இன் கீழ் சம்பள வரம்பில் கடைசியாக 2014 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அப்போது ஊதிய வரம்பு ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. மாறாக, ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தில் (ESIC) சம்பள வரம்பு 2017 முதல் ரூ.21,000 ஆக உள்ளது.
ஊழியர்கள் மற்றும் முதலாளி / நிறுவனம் இரு தரப்பும் இபிஎஃப் கணக்கில் (EPF Account) அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% பங்களிக்கின்றனர். பணியாளரின் முழு பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் (EPF) டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), மீதமுள்ள 3.67% இபிஎஃப் (EPF)கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சம்பள உச்சவரம்பில் மாற்றத்திற்கான எந்த உத்தரவாதமும் இதன் மூலம் அளிக்கபப்டவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.