வேகமாக மாறி வரும் நெப்டியூனின் வெப்பநிலை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

பிளானட்டரி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், எதிர்பார்த்ததற்கு மாறாக, நெப்டியூன் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை  குறைந்து  வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 13, 2022, 12:51 PM IST
  • பிளானட்டரி சயின்ஸ் இதழில் வெளியான ஆய்வு.
  • விஞ்ஞானிகள் மாற்றத்தின் விளக்கும் படத்தை உருவாக்கியுள்ளனர்.
  • நெப்டியூன் கிரகத்தில் வெப்பம் அதிகரிப்பதற்கு பதிலாக, குளிர்ந்து வருகிறது.
வேகமாக மாறி வரும் நெப்டியூனின் வெப்பநிலை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் title=

வாஷிங்டன்: நெப்டியூன் கிரகம் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4,49,82,52,900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. 

சூரிய குடும்பத்தை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் நெப்டியூன் பற்றிய சில அதிர்ச்சி தகவல்களை சேகரித்துள்ளனர். நெப்டியூனின் வளிமண்டலத்தின் வெப்பநிலை எதிர்பாராத விதமாக மாறுகிறது என்று ப்ளானெட்டரி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.

 உலகம் முழுவதும் உள்ள பல தொலைநோக்கிகளின் உதவியுடன், நெப்டியூன் வெப்பநிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தை விஞ்ஞானிகள் தெளிவாகப் படம்பிடிக்க முடிந்தது. எதிர்பார்த்ததற்கு மாறாக, இந்த கிரகத்தின் சராசரி வெப்பநிலை குறைந்து வருவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வின் முதன்மை ஆசிரியரும் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆராய்ச்சி கூட்டாளருமான டாக்டர் மைக்கேல் ரோமன், 'இந்த மாற்றம் எதிர்பார்க்கப்படவில்லை. தெற்கு கோடை காலத்தின் தொடக்கத்தில் இருந்து இதை நாங்கள் கவனித்து வருவதால், படிப்படியாக இங்கு வெப்பம் அதிகரிகும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம் என்றார்.

மேலும் படிக்க | Lunar Samples: நீல் ஆம்ஸ்ட்ராங் சேகரித்த நிலவின் மாதிரிகள் ஏலம்

இந்த மாற்றத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், வெப்பநிலை மாறுபாடுகள் நெப்டியூனின் வளிமண்டல வேதியியலில் பருவகால மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது தவிர, 11 வருட சூரிய சுழற்சியும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக நெப்டியூனின் வளிமண்டலம் எவ்வாறு மாறுகிறது என்பதை இந்த ஆய்வு விவரிக்கிறது. "எங்கள் தரவு நெப்டியூன் பருவத்தின் பாதிக்கும் குறைவான காலத்திற்கானது, எனவே இவ்வளவு பெரிய மற்றும் விரைவான மாற்றங்களை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை" என்று ஆய்வு இணை ஆசிரியரும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியுமான டாக்டர் க்ளென் ஆர்டன் கூறினார்.

மேலும் படிக்க |  Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!

நெப்டியூன் நம்மில் பலருக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் அதைப் பற்றி நாம் இன்னும்  நம்மைடம் குறைவான தகவல்களே உள்ளன. நெப்டியூன் சூரிய குடும்பத்தில் மிக தொலைவில் உள்ள கிரகம். நெப்டியூனின் மிக உயர்ந்த மேகங்கள் மிக வேகமாக உருவாகின்றன, கிரகத்தின் தோற்றம் வியத்தகு முறையில் மாறக்கூடும். இது சராசரியாக 30,600 மைல்கள் (49,250 கிமீ) விட்டம் கொண்டது. இது பூமியை விட நான்கு மடங்கு அகலமாக உள்ளது.

மேலும் படிக்க | விண்வெளியில் போர் மூண்டால்... இண்டர்நெட், DTH, GPS என எதுவும் இயங்காது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News