மேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள நகரின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் இயங்கும் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் பயணித்தனர்.
எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இரட்டை எஞ்சின் ஏடிஆர் 72 விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போகரா நோக்கி வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
#WATCH | A passenger aircraft crashed at Pokhara International Airport in Nepal today. 68 passengers and four crew members were onboard at the time of crash. Details awaited. pic.twitter.com/DBDbTtTxNc
— ANI (@ANI) January 15, 2023
மேலும் படிக்க | கொரோனாவினால் ஒரே மாதத்தில் 60,000 பேர் பலி... முதன் முதலாக ஒப்புக் கொண்ட சீனா!
நேபாளத்தின் பொது விமானத்துறை ஆணையத்தின்படி(CAAN), விமானம் காத்மாண்டுவில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இந்த விமானம் போகரா விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில், சேதி ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியது.
புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நகரங்களுக்கு இடையேயான விமான பயண நேரம் 25 நிமிடங்கள் தான். இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 5 இந்தியர்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
An aircraft, carrying 68 passengers and 4 crew members, crashed at Pokhara International Airport in Nepal today. 16 bodies have been recovered so far.
The aircraft also had 5 Indians onboard. pic.twitter.com/o2VsOJiVQ5
— ANI (@ANI) January 15, 2023
1992ஆம் ஆண்டு, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 167 பேரும் உயிரிழந்தனர். இதுதான் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய விபத்தாகும். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தாய் ஏர்வேஸ் விமானம் இதே விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதில் 113 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Work From Home மூலமா வேலையா... பாத்து சூதானமா இருங்க - இனி அபராதம்தான்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ