புதுடெல்லி: பூமி மாசுபாடு அதிகரித்துள்ளதாக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது விண்வெளியும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் உள்ள நிலையில், தற்போது, 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குப்பை பொருட்கள் விண்வெளியில் நகர்ந்து கொண்டிருப்பதால், இந்த துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) மற்றும் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களுடன் எந்த நேரத்திலும் மோதலாம் என்ற நிலை உள்ளது.
திங்களன்று, ரஷ்யா தனது சொந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை மூலம் ஒரு பழைய செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்திய நிலையில், இந்த விண்வெளி மாசுபாட்டில் ஆயிரக்கணக்கான புதிய குப்பை பொருட்கள் சேர்ந்துள்ளது. ரஷ்ய செயற்கைக்கோளில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான குப்பைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சுற்றி நகரத் தொடங்கி, ஐஎஸ்எஸ் மீது மோதும் அபாயம் ஏற்பட்டது.
ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்
ஐ.எஸ்.எஸ்ஸில் இருந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட விண்கலத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த விண்வெளி வீரர்கள் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகள் விண்வெளி நிலையத்தைத் தாக்கக்கூடும் என்றும், இது நடந்தால், அவர்கள் தங்கள் பணியை பாதியிலேயே விட்டுவிட்டு பூமிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டது. 2 மணி நேரம் கழித்து, இந்த குப்பைகள் விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி சென்றவுடன், விண்வெளி வீரர்கள் (Astronauts) ISS க்கு திரும்பினர்.
தகர்க்கப்பட்ட செயற்கைக்கோள் துண்டுகள் ஐ.எஸ்.எஸ் உடன் மோதும் அபாயம் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்பச் சொல்லுமாறும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) கூறியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு கூட, சீனா அழித்த ஒரு செயற்கைக்கோள் ISS என்னும் சரவதேச விண்வெளி நிலையத்தை தாக்கும் என்று அஞ்சியது, அதன் பிறகு முழு விண்வெளி நிலையத்தையும் அதன் இடத்தில் இருந்து கால் கிலோமீட்டர் தூரத்திற்கு விலக்கி வைக்க வேண்டியிருந்தது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் உள்ளது. ஆனால் இவ்வளவு தொலைவில் இருந்தாலும், இன்று இந்த விண்வெளி நிலையமும் மாசுபாட்டால் கலக்கமடைந்துள்ளது.
ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!
ரஷ்யாவின் இந்த பொறுப்பற்ற தன்மையினால், அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. ரஷ்யா செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, இது குறித்து ரஷ்யா எந்த தகவலையும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR