தைவானில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால், தைவானின் கிழக்கு கரையோரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்று சரிந்துவிழுந்தது.
இந்த விபத்தில் இருந்து பலரை மீட்ட போதிலும் பலர் இன்னும் கட்டிட இடிபாடுக்குள் சிக்கி தவித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் தொலைக்காட்சி வெளியுட்ட காட்சிகளின் படி, ஹூயலினிலுள்ள மார்ஷல் ஹோட்டலின் பகுதியளது அருகாமை கட்டிடங்களின் மீது சரிந்துள்ளது.
உள்ளூர் செய்திநிறுவனங்கள் தகவளின்படி, இதுவரை 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை மீட்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலநடுக்கத்தால் மற்றோரு ஹோட்டலும் சரிந்துள்ளதாக தேசிய தீமீட்பு படையினர் தெரிவித்துள்ளது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியலோலாஜிக்கல் சர்வேயின் படி, துறைமுக நகரமான ஹுவலீனுக்கு வடகிழக்கில் சுமார் 21 கிலோமீட்டர் (13 மைல்) தூரத்தில் இந்த நிலநடுக்கம் 23:50 pm (1550 GMT) மணியளவில் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் இப்பகுதியை தாக்கிய 100 சிறிய நிலநடுக்கத்தில் இது பெரிய அளவிலான நிலநடுக்கம் ஆகும்!
Taiwan hotel collapses after 6.4-magnitude earthquake, reports AFP quoting govt
— ANI (@ANI) February 6, 2018