சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மலேசியாவின் சபா நகரத்தில் 27 வயது ஆழ்கடல் நீச்சல் வழிகாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். கடலுக்கு அடியில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று வண்ண வண்ண மீன்கள் மற்றும் கடலின் அழகை அங்கிருக்கும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் காட்டுவார்கள். அப்படித்தான் கடந்த வெள்ளிகிழமை மதியம் 1 மணியளவில், தற்காலிக ஆழ்கடல் நீச்சல் வழிகாட்டி இளைஞர் ஒருவர், சீனாவில் இருந்து வந்திருந்த 24 வயதான இளம் பெண்ணை ஆழ்கடலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஆழ்கடலில் திடீரென அந்தப் பெண்ணின் கன்னத்தில் அவர் முத்தமிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!
ஆழ்கடலில் வீடியோ எடுக்கும் போது அந்தப் பெண்ணை சட்டென முத்தமிட்டுள்ளார் அந்த இளைஞர். இதனால் ஷாக்கான அந்தப்பெண் அந்த சம்பவத்துக்கு பிறகு அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அத்துமீறி அந்த இளைஞர் முத்தமிட்டது குறித்து சீனப் பெண் சபா நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து அரிஃப் அப்துல் ரசாக் என்ற காவல்துறை அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த இளைஞரை கைது செய்துள்ளார்.
இந்த வழக்கை போலீஸார் விசாரணை செய்து வருவதாகவும், வலுக்கட்டாயமாக பெண்ணை மானபங்கம் படுத்தியதாக அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்பதால், இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டங்கள்! இரண்டாம் உலக போர் நினைவு தினத்தில் உக்ரைன் போர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ