இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டம் எந்த முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளது!
இலங்கை பாராளுமன்றத்தில் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடத்துவதர்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்தகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் போது... ராஜபக்ஷ தலைமையிலான அரசிற்கு எதிராக கொண்டுவரப் பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக ஒரு முடிவுக்கு வரவேண்டுமெனில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பு அல்லது இயந்திர வாக்கெடுப்பு முறைக்கு ஒத்துவர வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து கட்சி உறுபினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
இத்தகைய நடவடிக்கையே நாட்டின் பொதுமக்கள் மற்றும் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த முறையாகும் என குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தை மாற்றியமைப்பது போன்ற மிக முக்கிய விஷயங்கள் தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளும்போது நிலையியற் கட்டளைகளில் குறிப்பிட்டிருந்தபோதிலும் குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாது என குறிப்பிட்டுள்ளார். எனினும் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடையே கருத்து ஒற்றுமை இடம்பெறாத நிலையில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் கலைக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகள் கலந்துக்கொண்ட போதிலு மக்கள் விடுதலை முன்னணி புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபரி மைத்திரிபால சிறிசேனவிற்கு இக்கட்சியினர் கடிதத்தின் மூலம் கூட்டத்திற்கு முன்னதாக தகவல் அளித்துள்ளனர்.