அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!

முதல்வன் திரைபடம் ஞாபகம் இருக்கா.. அதில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்பார். அதே போன்ற ஒரு நிகழ்வு பின்லாந்து நாட்டில் உண்மையில் நடந்துள்ளது. இதுவும் ஒரு சுவாரஸ்யமான் நிகழ்வு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2020, 12:26 PM IST
  • முதல்வன் திரைபடம் ஞாபகம் இருக்கா.. அதில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்பார்.
  • ஒரு நாள் சிஎம் மாதிரி, ஒரு நாள் PM ஆக ஒரு 16 வயது பெண் ஒருவர் ஒரு நாட்டில் பதவி ஏற்றுள்ளார்.
  • 34 வயதான பின்லாந்து பிரதமர் சன்னா மரின் டிசம்பர் மாதம் பதவியேற்றார்.
அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!! title=

முதல்வன் திரைபடம் ஞாபகம் இருக்கா.. அதில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்பார். அவர் முதல்வருடன் நடத்திய பேட்டியில், ஒரு சவாலை எதிர் கொண்டு ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்பார். அவர் பதவி ஏற்றுக் கொண்டு முதல்வரை ஒரு ஊழல் வழக்கில் கைதும் செய்வார். 

ஒரு நாள் சிஎம் மாதிரி, ஒரு நாள் PM ஆக ஒரு 16 வயது பெண் ஒருவர் ஒரு நாட்டில் பதவி ஏற்றுள்ளார்.

இதுவும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான்.. தெற்கு பின்லாந்தில் உள்ள வாஸ்கியைச் சேர்ந்த ஆவா முர்டோ (Aava Murto), ஒரு நாள் பிரதமராக பதவி ஏற்ற பின் நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் பேசினார். அவர் தனக்கு இது ஒரு 'உற்சாகமான நாள்' என்று கூறினார்.

பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 16 வயது பெண்ணான  ஆவா முர்டோவிடம், அதிகாரத்தை ஒப்படைத்தார் பின்லாந்து பிரதமர் சன்னா மரின்.

"சட்டத்தைப் பற்றி சில புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்" என்று முர்டோ மேலும் கூறினார். பிற்பகலில், காலநிலை மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்யும் மாணவராம, ஆவா முர்டோ, எம்.பி.க்கள் மற்றும் வர்த்தக அமைச்சருடன் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் குறித்து ஆலோசனை செய்வார்.

ALSO READ | கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா 'மிக பெரிய விலை' கொடுக்கு வேண்டியிருக்கும்: Donald Trump

"பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும், மேலும் அவர்கள் ஆண்களை போலவே பெண்களும் தொழில்நுட்பத்திலும், வேறு துறைகளிலும் சிறந்தவர்கள் என்பதை  உணர வேண்டும் என, ஒரு நாள் பிஎம் கூறினார்.

34 வயதான பின்லாந்து பிரதமர் சன்னா மரின் டிசம்பர் மாதம் பதவியேற்றார். அவர் உலகின் மிக இளைய பிரதமர் ஆவார். இது ஒரு கூட்டணி ஆட்சியாகும். பிரதமர் சன்னா மரின் அவர்களின் இன்றைய நாளும், முற்றிலும் மாறுபட்டதாக, பரபரப்பு இல்லாமால், இருந்தது.

நமது நாட்டில் படத்தில் வந்த நிகழ்வு, பின்லாந்து நாட்டில் உண்மை நிகழ்வாகியுள்ளது.

மேலும் படிக்க | US Election 2020: அதிபர் தேர்தலில் வரலாறு காணாத வகையில் பதியும் அஞ்சல் வாக்குகள்..!!!

கல்வி, பழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News