ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் 27வது நாளாக இன்றும் தொடர்கிறது. போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இது வரை எந்த விதமான ஆக்கப்பூர்வமான முடிவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பச்சை நிற டி-ஷர்ட்டில் மட்டுமே தோன்றுவதை அனைவரும் கவனித்திருக்கக் கூடும். போர் தொடங்கியதிலிருந்து, ஜெலென்ஸ்கி பச்சை நிற டி-ஷர்ட்டில் காணப்படும் காரணம் என்ன என்பது இப்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
பச்சை நிற டி-ஷர்ட் அணிந்து கொண்டு தான், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளில் அவர் உரையாற்றியுள்ளார். இந்த நாடுகளின் எம்.பி.க்களும் அவருக்கு கைதட்டல்கள் மூலம் பாராட்டுகளை அள்ளி வீசியுள்ளனர்.
மேலும் படிக்க | துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்
ஆடையில் சிறப்புச் செய்தி மறைந்திருக்கிறதா?
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு நடிகரும் கூட. அவர் உலகின் முன் தோன்றும் போது, அவரது ஆடை மூலம் தனது நிலையை உணர்த்த விரும்புகிறார். ஜெலென்ஸ்கி தன்னை ஒரு கிளர்ச்சியாளராகவும், போஸ்டர் பாய்யாகவும் உலகுக்குக் காட்டிக் கொள்கிறார் என கூறப்படுகிறது. மறுபுறம், ரஷ்ய அதிபர் புடின் அணிந்து வரும் ஆடைகள், அவரது நம்பிக்கை உணர்வையும், மேற்கத்திய நாடுகளை தான் ஆதிக்கம் செலுத்துவது போன்ற உணர்வில் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
விளாடிமிர் புடின் அணிந்திருந்த 11 லட்சம் மதிப்புள்ள ஜாக்கெட்
சமீபத்தில் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அணிந்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள ஜாக்கெட் குறித்தும் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த ஜாக்கெட்டை பிரபல இத்தாலிய நிறுவனமான லோரோ பியானா வடிவமைத்துள்ளது. புடின் ஜாக்கெட்டின் கீழ் அணிந்திருந்த ஸ்வெட்டரின் விலையும் சுமார் 4 ஆயிரத்து 218 அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR