பாகிஸ்தானின் அரசியல் கட்சியிடமிருந்தே, தனி பலூசிஸ்தான் வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வெளிப்படையான குரல் எழுந்துள்ளது. எதிர்க்கட்சி பி.டி.எம் (PDM) நடத்திய பேரணியில், ஜாமியத் உலமா-ஈ-பாகிஸ்தான் தலைவர் ஓவைஸ் நூரானி ஆசாத், தனி பலூசிஸ்தான் அமைக்கப்படும் அறிவித்தார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் (Imran khan) அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சி பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ஏற்பாடு செய்த மூன்றாவது பேரணியில், பலூசிஸ்தானை தனி நாடாக ஆக்க வேண்டும் என்று எழும் கோரிக்கை பாகிஸ்தானில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஜாமியத் உலமா-இ-பாகிஸ்தான் தலைவர் ஒவைஸ் நூரானி நடத்திய பேரணியில் ஆசாத் பலூசிஸ்தானை உருவாக்குவதாக அறிவித்தார். பலூசிஸ்தான் மக்களை பாகிஸ்தான் அரசு கொள்ளை அடிக்கிறது என அவர் குறிப்பிட்டார்
இது இம்ரான் அரசிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் பலூச் எதிர்ப்பு போராட்டங்களை கண்டு பாகிஸ்தான் இராணுவம் அச்சதில் உள்ளதாக்கவும் கூறப்படுகிறது
இது சீனாவிற்கும் (China) தலைவலியை அதிகரித்துள்ளது. ஏனென்றால், சீனா பலுசிஸ்தானில் லட்சக்கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது, இந்த பகுதி சீன புறநகராக மாறி உள்ளது எனக் கூறலாம். இந்த பிராந்தியத்தில் இயற்கை வளங்கள் நிறைந்திருக்கின்றன, இங்கிருந்து தாதுக்களை பிரித்தெடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை வளமாக்கி வருகின்றனர். இதனால், பலூச் மக்கள் நெடுங்காலமாகவே பாகிஸ்தான் அரசை எதிர்த்து வருகின்றனர்
சீனாவிற்கு நிலங்களை தாரை வார்க்கும் அரசின் செயலை எதிர்க்கும் பலூசிஸ்தானில் உள்ள உள்ளூர் மக்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கடத்தப்படுகின்றனர். பின்னர் அவர்களின் சடலங்கள் தான் கிடைக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் இராணுவத்தை தாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர். அண்மையில், பாகிஸ்தான் துணை ராணுவப் படைகளின் மீது நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பலுச்சிஸ்தான் விடுதலையை கோரும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் எப்போதும் சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டமான CPEC திட்டதை எதிர்த்து வருகிறது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் பணிபுரியும் சீன குடிமக்களை தாக்குவதாகவும் பல முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், கராச்சியில் உள்ள சீனத் தூதரகத்தை தாக்கியதாகவும் இந்த அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது. பலூச் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் சிபிஇசி தொடர்பான முடிவை பாகிஸ்தான் எடுத்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இப்போது பாகிஸ்தானிற்கு பலுச்சிஸ்தான் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR