கிங் டேவிட் விடுதி: உலகிலேயே மிக பாதுகாப்பான விடுதியில் மோடி

Last Updated : Jul 5, 2017, 12:38 PM IST
கிங் டேவிட் விடுதி: உலகிலேயே மிக பாதுகாப்பான விடுதியில் மோடி title=

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 நாள் பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். 

இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் ஆகும். மேலும் இதனுடன் இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை.

இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். 

பிரதமர் மோடி ஓய்வு எடுக்கும் வகையிலான மிகவும் பாதுகாப்பான இடத்தை இஸ்ரேல் தேர்வு செய்துள்ளது. 

இது குறித்து கிங் டேவிட் விடுதியின் செயல்பாட்டு இயக்குனர் ஷெல்டன் ரிட்ஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி அவரின் முழு பயண வசதியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தங்குவதற்காக உலகிலேயே மிகப்பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்துள்ளோம். 

இந்த விடுதி முழுவதும் குண்டு வைத்து தகர்த்தப்பட்டாலும் மோடி இருக்கும் அறைக்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஒரு வேளை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அந்த அறையை சுற்றி இருக்கும் பாதுகாப்பு வளையம் ஒரு தனிக் கூண்டாக அதை மாற்றிவிடும். இது வரை இந்த விடுதியில் அமெரிக்க அதிபர்களான கிளிண்டன் முதல் ஒபாமா வரை வந்து தங்கியுள்ளதாகக் கூறுகிறார் ரிட்ஸ். 

பிரதமர் மோடியின் உணவில் முட்டை, சர்க்கரையில்லாத உணவுகள் தயாரிக்கப்பட உள்ளன. அனைத்திலும் இந்திய ரசனை இதுமட்டுமின்றி இங்கு அலங்காரத்திற்கு வைக்கப்படும் மலர்கள் கூட இந்திய அதிகாரிகளுக்கு பிடிக்கும் வகையில் அலங்கரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மோடி தங்கும் அறையிலேயே அவருக்கான உணவுகள் தயாரிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக தயாரிக்கும் உணவுப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 

எங்களுடைய ஓட்டல் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்வதற்கு மேலும் காரணம் உள்ளது. மைக்கேல் ஃபெடர்மேனின் நிறுவனங்களில் ஒன்றான டேன் ஓட்டல்கள் இந்த ஓட்டலின் ஒரு அங்கம். ஃபெடர்மேனின் ஓஙங்ல ட்ரோன்கள், ஏவியோகின்ஸ் தயாரிப்பில் முன்னணி இடம் வகிக்கின்றன. 

Trending News