காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக வேண்டும் - ஷாகித் அப்ரிடி!

காஷ்மீர் யாருக்கும் வேண்டாம், அதனை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 14, 2018, 06:56 PM IST
காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக வேண்டும் - ஷாகித் அப்ரிடி! title=

காஷ்மீர் யாருக்கும் வேண்டாம், அதனை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்!

பாகிஸ்தானின் பிரதமராக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பொறுப்பேற்றபின் பல்வேறு உள்நாட்டுக் குழப்பங்கள் பல எழுந்து வருகின்றது. இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்றப்பின் காஷ்மீர் பிரச்சினை குறித்த தெளிவான பார்வை இல்லை எனவும், பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்களும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. மேலும் பயங்கரவாதிகள் எல்லை மீறி இந்தியாவில் தாக்குதல் நடத்துவதும், இந்தியா பதிலடி கொடுப்பதும் என தொடர் சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது லண்டன் 'மாணவர்கள் நாடாளுமன்றத்தில்' பாக்கிஸ்தான் அரசின் செயல்பாடு அதிருப்பதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீரை பாக்கிஸ்தான் கேட்கவில்லை, இந்தியாவும் காஷ்மிரை கொடுக்க வேண்டாம். காஷ்மிர் மாநிலத்தை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் போதும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பாக்கிஸ்தான் அரசால் நான்கு மாகாணங்களை கூட சரியாக நிர்வகிக்க இயலாது. இந்நிலையில் காஷ்மிரை கேட்டும் பயனில்லை. காஷ்மீரில் மக்கள் செத்து  கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டியவர்கள்.

இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ காஷ்மீரை கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஷாகித் அப்பிரிடி கருத்துத் தெரிவிப்பது இது முதல் முறை அல்ல... இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் "இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கவலைக்கிடமான சூழல் நிலவுகிறது. சுதந்திரம் கேட்டு குரல் கொடுக்கும் அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்படுகிறார்கள். ஐ.நா சபை எங்கே இருக்கிறது, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எங்கே இருக்கின்றன." என தெரிவித்திருந்தார்

Trending News