உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க நிறுவனங்களில் பெருமளவிலான பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். கூகுள் நிறுவனம் 12,000 பேர்களை ஜனவரி 20 பணியில் இருந்து நீக்கியது. கடந்த வாரம், மைக்ரோசாப்ட் 10,000 பேர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.
இன்டெல் நிறுவனமும் பணிநீக்க செயல்பாட்டை மேற்கொள்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பே ஏரியாவிலும், அதன் அருகிலுள்ள இடங்களிலும் குறைந்தது நூற்றுக்கணக்கான ஊழியர்களை நீக்க உள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் டெக் உலகில் ஜாம்பவான்களாக கருதப்படும் நிறுவனங்களே, ஆயிரக்கணக்கான பணியாளர்களை 'திடீர்' பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கடந்தாண்டில் இருந்து இந்த பணிநீக்க நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் செயல்படுத்தி வருகின்றனர்.
கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்கம் செய்து வருவதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இந்திய - அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ஜோ பிடன் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
பணிநீக்கங்கள் குடும்பங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி ஜோ பிடன் புரிந்து கொண்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. செவ்வாயன்று நடந்த தினசரி செய்தியாளர் கூட்டத்தில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறினார், "ஒரு வேலை இழப்பு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை அதிபர் நன்கு புரிந்துகொள்கிறார்."
மேலும் படிக்க | ஒரே ஆண்டில் துப்பாக்கிச்சூட்டில் 44,000 பேர் பலி! என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
'ஆட்குறைப்பு இருந்தபோதிலும், வேலையின்மை விகிதம் குறைகிறது'
அமெரிக்கப் பொருளாதாரம் அனைவருக்கும் வேலை செய்வதை உறுதி செய்ய ஜனாதிபதி பிடன் முடிந்த அனைத்தையும் செய்வார் என்று ஜீன்-பியர் உறுதியளித்தார். பணிநீக்கங்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது. இது பிடென் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | US விசா பெற 2 ஆண்டுகள் காத்திருக்க முடியாதா... TCN மூலம் விசா பெறலாம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ